ஆதவ் அர்ஜுனா தான் டாப்.. தவெகவிற்கு அதிக நன்கொடை வழங்க 2 அமைச்சர்கள் போட்டா போட்டி! இன்னொருவர் யார்? சர்ப்ரைஸ்

  • சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடந்த 2025-26ம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் ரூ.13.30 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா மட்டும் ரூ.8.20 கோடியை அள்ளி கொடுத்துள்ளார். இவருக்கு போட்டியாக இன்னொரு அமைச்சர் ரூ.5 கோடியை தூக்கி கொடுத்துள்ளது. அவரது பெயர் தான் பலருக்கும் சர்ப்ரைஸாக உள்ளது.

    Advertisement

    ஒவ்வொரு கட்சிகளுக்கும் கடந்த 2025-26 நிதியாண்டில் கிடைத்த நன்கொடை தொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடந்த 2025-26ம் ஆண்டில் நன்கொடையாக மொத்தம் ரூ.13.30 கோடி கிடைத்துள்ளது.

    Advertisement

    இதில் அதிகபட்சமாக தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கி உள்ளார். இவர் மொத்தம் ரூ.8.20 கோடியை தவெகவிற்கு நன்கொடை வழங்கி உள்ளார். ஆதவ் அர்ஜுனா பெரும் பணக்காரர் என்பது நமக்கு தெரியும். இதனால் அவரது நன்கொடையில் யாருக்கும் சர்ப்ரைஸ் இல்லை.

    திமுக - அதிமுகவிற்கு ரூ.260 கோடி நன்கொடை.. அள்ளி தந்த லாட்டரி நிறுவனம்! மார்ட்டின் நண்பர் தாராளம்

    இவருக்கு அடுத்ததாக இன்னொரு அமைச்சரும் ஆதவ் அர்ஜுனாவுக்கு போட்டி கொடுக்கும் வகையில் கட்டுக்கட்டாக பணத்தை தவெகவிற்கு நன்கொடை வழங்கி தாராளம் காட்டி உள்ளார். அவரது பெயர் ரஞ்சித் குமார். இவர் ரூ.5 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளார். ரஞ்சித் குமார் தற்போதைய முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக உள்ளார்.

    Advertisement

    இவர் காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியின் தவெக எம்எல்ஏ ஆவார். அதோடு பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார். விவசாயம், பெட்ரோல் பங்க், கோழி வளர்ப்பு, ரியல் எஸ்டேட் உள்பட இன்னும் சில தொழில்களை நடத்தி வருகிறார். இவர் தனது வேட்புமனுவில் ரூ.17.3 கோடிக்கு சொத்து இருப்பதாக கூறியிருந்தார்.

    இவர் பல்வேறு கட்சிகளில் செயல்பட்டு வந்தார். முதலில் காங்கிரஸ் அதிமுகவில் செயல்பட்டு வந்தார். பிறகு டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்து செயல்பட்டார். 2021 சட்டசபை தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் அமமுக சார்பல் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு ஓ பன்னீர் செல்வம் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு அணியில் இணைந்தார். ஓ பன்னீர் செல்வம் அணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக செயல்பட்டார்.

    Advertisement
    பாமக வேண்டாம்.. ஒதுக்கி வைக்கும் தவெக.. திடீரென ரூட்டை மாற்றிய முதல்வர் விஜய்! பின்னணி

    கடைசியாக பண்ருட்டி ராசமச்சந்திரனின் இணைந்து செயல்பட்டார். 2026 பிப்ரவரி மாதம் 19ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டது. அதன் மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு வாரத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்து தேர்தலுக்கு முன்பாக தவெகவில் இணைந்தார். உடனடியாக காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் டிக்கெட் வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் அமைச்சர் ரஞ்சித் குமார் மொத்தம் 91,350 ஓட்டுகள் வாங்கி அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்தை (பெற்ற வாக்குகள் 75,861) 15,488 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அதன்பிறகு வனத்துறை அமைச்சரானார் என்பது குறிப்பிடத்தக்கது.