மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்?

  • சென்னை: தமிழகத்தில் தற்போதைய அரசியல் நகர்வுகளில் மிக முக்கிய திருப்பமாக, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு ராஜ்யசபா இடத்தை, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தவெக விட்டுக்கொடுத்துள்ளது. அதுவும், கட்சி தொடங்கி, இரண்டரை ஆண்டுகளிலேயே தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த நிலையில் ராஜ்யசபா எம்.பி ஆகும் வாய்ப்பை விட்டுக் கொடுத்துள்ளது தவெக.

    Advertisement

    நம் கட்சியின் குரலை டெல்லியில் ஒலிக்கச் செய்ய, தவெக தனது சொந்த நாடாளுமன்ற உறுப்பினரை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? என தவெக தொண்டர்கள் மத்தியில் ஒரு முக்கியமான கேள்வி எழுந்துள்ளது.

    Advertisement

    ராஜ்யசபா எம்பி-க்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

    மக்களவை (Lok Sabha) உறுப்பினர்களைப் போல மக்கள் நேரடியாக வாக்களித்து ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில்லை. ஒரு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) தான் தங்களின் வாக்குகள் மூலம் ராஜ்யசபா எம்பி-க்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

    தற்போதைய தமிழக சட்டமன்றத்தின் மொத்த இடங்கள் மற்றும் தவெக பெற்றுள்ள பலத்தின் அடிப்படையில்தான், தவெக மீண்டும் எப்போது தனக்கான ராஜ்யசபா எம்.பியைப் பெற முடியும் என்பது தீர்மானிக்கப்படும்.

    தமிழகத்திலிருந்து மொத்தம் 18 ராஜ்யசபா இடங்கள் உள்ளன. இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒருமுறை, மூன்றில் ஒரு பங்கு (6 இடங்கள்) உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்கும்.

    Advertisement

    தவெக இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

    ஒரு கட்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து ஒரு ராஜ்யசபா எம்பி கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு 34 முதல் 35 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை (மொத்த எம்.எல்.ஏ-க்கள் 234 / காலியிடங்கள் 6 + 1).

    இந்த முறை ஒரே ஒரு ராஜ்யசபா இடத்திற்கு இடைத்தேர்தல் என்பதால் 50%- ஐ விட அதிக ஆதரவு தேவை. எனவே தவெக தனது சொந்த பலத்தில் டெல்லிக்கு எம்.பியை அனுப்பி இருக்கலாம்.

    இந்த முறை கிடைத்த வாய்ப்பை காங்கிரஸுக்கு தவெக அளித்துவிட்டது. அடுத்த இரு ஆண்டுகளில் 2028-ல் தமிழகத்தில் மீண்டும் 6 இடங்கள் காலியாகும். தவெக தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு அல்லது சட்டமன்ற பலத்தோடு கோரினால் 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

    Advertisement

    அப்போது 3 ராஜ்யசபா எம்.பிக்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தவெகவுக்கு கிடைக்கும். அதன்பிறகு ஜூலை 2031ல் அடுத்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும். அதற்குப் பிறகு ஏப்ரல் 2032ல் 6 இடங்கள் காலியாகி ராஜ்யசபா தேர்தல் வரும்.

    விஜய்யின் இந்த வியூகம் ஏன்?

    தவெக இந்த ராஜ்யசபா இடத்தை காங்கிரஸுக்கு கொடுத்ததற்குப் பின்னால் ஒரு தீர்க்கமான அரசியல் கணக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    மத்தியில் பாஜவை எதிர்க்கும் தேசிய அளவிலான கூட்டணியை வலுப்படுத்தவும், தமிழகத்தில் காங்கிரஸ் உடனான இணக்கமான உறவைத் தக்கவைக்கவும் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார்.

    Advertisement

    அவசரப்பட்டு ஒரு இடத்தை வாங்குவதை விட, கூட்டணி தர்மத்தை மதிப்பதன் மூலம் வரும் நாடாளுமன்ற அல்லது உள்ளாட்சித் தேர்தல்களில் பெரிய பலனைப் பெறலாம் என்ற வியூகம்.

    அரசியல் ரீதியாகப் பார்த்தால், தவெக தனது சொந்த எம்பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் குறைந்தது 2 ஆண்டுகள் (2028 வரை) காத்திருக்க வேண்டியிருக்கும். எனினும், தவெகவின் இந்த தாராள மனப்பான்மை, வரும் காலங்களில் தேசிய மற்றும் மாநில அரசியலில் அதன் செல்வாக்கை உயர்த்த உதவும் என்றே தவெக தரப்பு நம்புகிறது.

    English Summary

    In a significant twist amidst the current political developments in Tamil Nadu, the TVK has ceded a Rajya Sabha seat to Congress party. Notably, the TVK has foregone the opportunity to secure a Rajya Sabha MP seat.