விஜய் மேல பிரச்சனை இல்ல.. மதுராந்தகம் வேட்பாளருக்கு எதிர்ப்பு.. தவெக எம்எல்ஏ காமாட்சி பேசிய வீடியோ!

  • செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக மரகதம் குமரவேல் அல்லாமல் வேறு யாரையாவது நிறுத்தி இருக்கலாம் என்று பல்லாவரம் தவெக எம்எல்ஏ காமாட்சி பேசியுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. முதல்வர் விஜய் பிரச்சனை அல்ல என்றும், வேட்பாளர் தான் பிரச்சனை என்றும் அவர் பேசி இருக்கிறார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் பதவியேற்ற 10 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தவெகவில் மீண்டும் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் 5 அமைச்சர்கள் மற்றும் 15க்கும் அதிகமான எம்எல்ஏ-க்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அதேபோல் மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் வாக்கு சேகரிக்க 2 நாட்கள் ஒதுக்கி, முதல் நாள் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டார். ஆனாலும் மரதகம் குமரவேலுக்கு பொதுமக்கள் மத்தியிலும், அதிமுக ஆதரவாளர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. எதற்காக ராஜினாமா செய்தீர்கள் என்று ஏராளமானோர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Advertisement

    இதனால் போலீஸ் பாதுகாப்புடன் தான் மரகதம் குமரவேல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் மரதகம் குமரவேலுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்ட பல்லாவரம் தவெக எம்எல்ஏ காமாட்சி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. வயல் வெளிகளில் அமர்ந்து, செல்ஃபோனில் காமாட்சி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

    அந்த வீடியோவில் காமாட்சி, முதல்வர் விஜய் பிரச்சனை இல்லை.. வேட்பாளர் தான் பிரச்சனை.. மரகதம் குமரவேல் அல்லாமல் வேறு யாரையாவது நிறுத்தி இருக்கலாம். ஏற்கனவே இந்த தொகுதியில் தவெக 2வது இடம் வந்தது. வேறு யாரையாவது நிறுத்தி இருக்கலாமே என்கிறார்கள். வேட்பாளர் மரகதம் குமரவேக்கு உள்ளே வராதீர்கள் என்று எதிர்ப்பு இருக்கிறது என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

    English Summary

    TVK MLA Kamatchi video Remarks Leadership Should Have Picked Different Candidate for Madurantakam