தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி! நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா

  • சென்னை: அண்ணாமலை இப்போது புதிதாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துள்ள நிலையில், அதை தவெக எம்எல்ஏ முஸ்தபா கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணாமலையால் தமிழகத்தில் சாதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட முஸ்தபா, தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலி கானுக்கும் இடையே தான் போட்டி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    Advertisement

    தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக இருந்தவர் அண்ணாமலை. கடந்தாண்டு இவர் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போதே அண்ணாமலை அதிருப்தியில் இருந்ததாகவும் மாநிலத்தில் உள்ள சில தலைவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் சொல்லப்பட்டது. இருப்பினும், அண்ணாமலை பொதுவெளியில் எதுவும் சொல்லவில்லை. தொடர்ந்து பாஜகவிலேயே இருந்தார்.

    Advertisement

    அண்ணாமலை

    நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. அதேநேரம் பாஜக வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்த சூழலில், அண்ணாமலை கட்சியில் இருந்து வெளியேறுவார் எனச் சொல்லப்பட்டது. அதன்படி கடந்த வாரம் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜகவின் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். பாஜகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

    மேலும், கையோடு புதிய இயக்கத்தையும் ஆரம்பித்தார். இந்த இயக்கத்தில் பல்வேறு தலைவர்களையும் ஒருங்கிணைக்கப் போவதாகத் தெரிவித்தார். வீ தி லீடர்ஸ் என்ற பெயர் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் வெறும் சில மணி நேரத்தில் பல லட்சம் பேர் இணைந்தனர். அதேநேரம் அண்ணாமலை தமிழகத்தில் பெரிய தலைவராக உருவெடுக்க முடியாது என்று தவெக எம்.எல்.ஏ முஸ்தபா தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மன்சூர் அலி கான்

    இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் பாஜகவே கிடையாது.. அண்ணாமலை ஒரு கட்சியை ஆரம்பித்து அவர் பண்ற அலப்பறையை ஒரு வாரமாகத் தாங்க முடியவில்லை. தமிழ்நாட்டில் அண்ணாமலைக்கும் யாருக்கும் போட்டி எனக் கேட்டால்.. அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி என்பேன். மன்சூர் அலிகான் ஒரு இயக்கம் வைத்திருக்கிறார் தெரியுமா? சீமான் ஒரு இயக்கம் வைத்திருக்கிறார்.. அவரோடு வேண்டுமானால் போட்டி போடலாம். கமல் ஒரு இயக்கம் வைத்திருக்கிறார் அவரோடு போட்டி போடலாம். இந்த மாதிரி சின்ன சின்ன கட்சிகளோடு தான் அண்ணாமலையால் போட்டி போட முடியும்.

    Advertisement

    பாஜக

    அண்ணாமலை எங்கிருந்து வருகிறார்.. பாஜகவில் இருந்து வருகிறார்.. அவரால் தமிழகத்தில் பாஜகவையே வளர்க்க முடியவில்லை. இதனால் தான் தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராக இருப்பதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி அவரை நீக்கினர். அந்தளவுக்குத் தான் அண்ணாமலை நிலைமை இருக்கிறது.

    அண்ணாமலை ஒரு கட்சி ஆரம்பித்து களத்திற்கு வருகிறார்.. மக்களைச் சந்திக்கப் போகிறேன் என்கிறார். இப்போது இருக்கக்கூடிய அண்ணாமலையின் நிலைமை ஒன்றும் கிடையாது. அவர் பேசாமல் வீட்டில் இருக்கும் 20,000 புத்தகங்களைப் படிக்கப் போகலாம் அல்லது மாடு மேய்க்கப் போகலாம் அல்லது விவசாயம் செய்யப் போகலாம்.

    Advertisement

    பிம்பம்

    மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதுநாள் வரை அவர் அரசியல் களத்தில் எதுவும் செய்யவில்லை. இனியும் அவர் என்ன பண்ணப் போகிறார் என்று மக்கள் பார்ப்பார்கள். அவர் வெறுமன தன்னை சுற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார். அதிமுக என்ற கட்சி இப்போது இல்லாமல் போய்விட்டதால் அண்ணாமலையை இறக்கிவிட்டுள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தான் இறக்கி விட்டிருக்கிறது. கொங்குப் பகுதியில் மட்டுமே அதிமுக ஒரு கணிசமான இடத்தைப் பெற்று இருக்கிறார்கள். இவரை வைத்து அவர்களை முடித்து விடலாம் என்று பிளான் பண்ணி பா.ஜ.க இவரை இறக்கிவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் பாஜகவில் இருந்து வரும் யாராக இருந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்"" என்று கூறினார்.

    English Summary

    TVK MLA Mustafa launched a fierce verbal attack on former TN BJP Chief Annamalai new political movement(அண்ணாமலையை சாடிய தவெக எம்எல்ஏ முஸ்தபா): Mustafa on Annamalai New Movement latest news in tamil.