மொதல்ல இவங்ககிட்ட இருந்து தான் தமிழைக் காப்பாத்தனும்! என்னது காணீயான் பூங்குன்றானா? உளறிய MLA பல்லவி

  • சென்னை: சட்டப்பேரவையில் இன்று பேசிய திருவிக நகர் தவெக எம்எல்ஏ பல்லவி, தான் முதல்முறை அவையில் பேசுவதாகவும், பதற்றமாக இருப்பதாகவும் கூறினார். மாற்று சபாநாயகர் தளவாய் சுந்தரம், நீங்கள் நிறுத்தாமல் பேசவும், எதுவும் தவறில்லை என்றார். ஆனாலும், தமிழை பார்த்துப் படிப்பதற்கே தடுமாறிய பல்லவி கணியன் பூங்குன்றனாரை காணீயாம் பூங்குன்றான் என்றதோடு, போதை உருவாக்கவேண்டும், போதை மையம் உருவாக்க வேண்டும் எனவும் பேசியது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

    Advertisement

    2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று இருக்கும் நிலையில், தற்போது தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. கடந்த 5ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.

    Advertisement

    அதே நாளில் பொது பட்ஜெட்டும், 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதமும் தொடர்ந்து 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது.

    இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். விவாதத்தின் முடிவில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு அந்தந்தத் துறைகளின் அமைச்சர்களான மரிய வில்சனும், வினோத்தும் பதிலுரை வழங்கினர்.

    Advertisement

    தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கையை மீதான விவாதம் நடந்தது. பல்வேறு துறைகளில் சார்பில் மானிய கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டு உறுப்பினர்களின் விவாதங்களுக்கு பிறகு அமைச்சர்களின் பதிலுரையும் இடம் பெற்றது. இதில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

    பார்த்து படிக்கக்கூட முடியாமல் எம்எல்ஏக்கள் திணறியதை பார்த்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே அமைச்சர் ஜெகதீஸ்வரி தமிழை படிக்க முடியாமல் தட்டு தடுமாறி உளறியது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் அந்த பட்டியலில் சேர்ந்து இருக்கிறார் திருவிக நகர் தவெக எம்எல்ஏ.

    Advertisement

    பல்லவி இன்று சட்டசபையில் முதன்முறையாக அவர் பேசினார். பேப்பரில் எழுதி வைத்ததை படிப்பதற்கே மிகவும் திணறினார் குறிப்பாக புலவர் கணியன் பூங்குன்றனாரை 'காணியாம் பூங்குன்றான்" என்றதோடு, போதை உருவாக்க வேண்டும், போதை மையம் உருவாக்க வேண்டும்,போதைக்கு மாற்று கொண்டு வர வேண்டும். கல்வித்துறை நடவடிக்கை எடுப்பது அவசியம் என பேசினார்.

    பிறகு சட்டசபையில் முதல் முறையாக பேசுவதால் பதற்றமாக இருப்பதாக பல்லவி கூறிய நிலையில் மாற்று சபாநாயகராக இருந்த தளவாய் சுந்தரம் நீங்கள் நிறுத்தாமல் பேசலாம் தவறில்லை என்றார். தொடர்ந்து பேசிய பல்லவி நான் தவறாக பேசினால் மன்னித்து விடுங்கள் என குறி தனது தொகுதியை பிரச்சனைகள் பற்றி உரையாற்றினார்.

    Advertisement

    தற்போது அவரது பேச்சு சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் உரையாற்றிய அவையில் மாற்று மொழி பேசுபவர்கள் கூட செந்தமிழில் பேசிய நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏக்கள் இப்படி உளறுவதை பார்க்க சகிக்கவில்லை என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

    English Summary

    TVK MLA Pallavi faced social media criticism after struggling to read Tamil and mispronouncing poet Kaniyan Pungundranar during her Assembly speech.