ரூ.30 லட்சம் கார் இருக்கும் போது ஆட்டோவில் வருவதாக சொன்னது ஏன்? தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பதில்!

  • சென்னை: ரூ.30 லட்சம் மதிப்பிலான டிஃபெண்டர் கார் இருக்கும் போது, சட்டசபைக்கு ஆட்டோவில் வருகிறேன் என்று சொன்னது ஏன் என்ற கேள்விக்கு தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பதில் அளித்துள்ளார். தேனி - சென்னை இடையிலான தூரம் 450 கிமீ என்பதால் ரயிலில் வருவதாக கூறிய அவர், சோசியல் மீடியாவில் வருவதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டு கொண்டுள்ளார்.

    Advertisement

    சட்டசபையில் முதல்வர் விஜய் இன்று அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல் கார் பராமரிப்பு மற்றும் பெட்ரோல் செலவுகளுக்கு ரூ.75 ஆயிரமும், உதவியாளர்களுக்கான படியாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து சட்டசபையில் பேசினர்.

    Advertisement

    அதில் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பேசுகையில், சட்டசபை உறுப்பினர்களுக்கு கார் வழங்கிய முதல்வர் விஜய்யின் முடிவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கல்லூரி படிக்கும் போது காதல் தோல்வி ஏற்பட்டது. அப்போது வேலையும் இல்லை.. காரும் இல்லை.. இப்போது இரண்டையும் முதல்வர் விஜய் கொடுத்துள்ளார். நான் ரயிலில் வருகிறேன்..

    அங்கிருந்து ஆட்டோவில் சட்டசபைக்கு வரும் போது, ஒவ்வொரு முறையும் காவலர்கள் தடுத்து நிறுத்துவார்கள். எம்எல்ஏ என்று கூறி அடையாள அட்டையை காட்டினாலும் நம்ப மாட்டார்கள் என்று கூறினார். இவரின் பேச்சால் சட்டசபை கலகலப்பாகியதோடு, முதல்வர் விஜய் திரும்பி பார்த்து கவனித்து கொண்டார். இதன் வீடியோவும் சோசியல் மீடியாவில் டிரெண்டாகியது.

    Advertisement

    இந்த நிலையில் பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரனின் தேர்தல் வேட்புமனு பிரமாண பத்திரத்தில், அவர் தன்னிடம் கார் இருப்பதாக கூறியுள்ளார். புதிய ரேஞ்ச் ரோவர் டிஃபெண்டர் காருடன் நிற்கும் புகைப்படத்தையும் சபரி ஐங்கரன் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதனால் சட்டசபைக்கு ஆட்டோவில் வருவதற்காக சபரி ஐங்கரன் கூறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளன.

    அதேபோல் கார் இல்லையென்று சட்டசபையில் பொய் கூறினாரா என்ற விவாதமும் தொடங்கி இருக்கிறது. இதுதொடர்பாக சட்டசபையில் இருந்து வெளி வந்த தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபரி ஐங்கரன், முதல்வரின் அந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.. சென்னை - தேனி இடையிலான பயணம் 450 கிமீ.. அதனால் ரயிலில் தான் வருகிறேன். சோசியல் மீடியாவில் வருவதை நம்பாதீர்கள் என்று தெரிவித்தார்.

    English Summary

    TVK MLA Sabari Aingaran Clarifies Why He Traveled by Auto Despite Owning ₹30 Lakh Defender Car