ஒரு பக்கத்து மீசையை மழிக்க ஆர்.எஸ்.பாரதி தயாரா? தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன் கேள்வி

  • சென்னை: வாக்காளர்களுக்கு சாபமிடும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,ஒரு பக்க மீசையை மழித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என சோழிங்கநல்லூர் தொகுதி தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்த விழாவில் எம்எல்ஏ இசிஆர் சரவணன் பேசுகையில், மாநகராட்சித் தேர்தலில் தவெக வென்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வேன் என ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.

    Advertisement

    உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு அந்த சவாலை நிறைவேற்ற ஆர்.எஸ்.பாரதி தயாராக இருக்க வேண்டும். 100 ஆவது சுதந்திரத் தினத்தன்றும் முதல்வர் விஜய்தான் தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி ஏற்ற போகிறார்.

    சட்டசபைத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியனுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என கூறியது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை காரம்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாளையொட்டி புகழ்வணக்க பொதுக் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பெஞ்சமின், காரப்பாக்கம் கணபதி, பிரபாகர் ராஜா, திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Advertisement

    அப்போது ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், "இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது நாம் இன்னும் ஆளும் கட்சியாக இருக்கிறோமா என சந்தேகம் எழுந்துள்ளது.

    1970-களில் எப்படி திமுக கூட்டத்திற்கு தொண்டர்கள் வருவார்களோ அது போல் இன்றைக்கும் வந்துள்ளீர்கள். திமுக ஆட்சி போன பிறகு நான் 3 பொதுக் கூட்டங்களில் பேசியுள்ளேன். இன்றைக்கு இருக்கும் தலைமுறையினர் திமுக தலைவர் தோல்வியடைந்து பார்க்கவில்லை.

    அதனால் திமுக தொண்டர்கள் துவண்டு போயுள்ளனர். கருணாநிதி 50 ஆண்டுகாலம் நடந்த எந்த தேர்தலும் தோற்றதில்லை. 13 முறை அவர் வென்றார். இதுவரை தமிழகத்தின் தலைவராக இருந்த அவர் வரும் காலத்தில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக் கூடிய தலைவராக உருவாகிக் கொண்டிருக்கிறார்.

    Advertisement

    தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும். இன்றைக்கு வீட்டு வரி உயர்ந்துவிட்டதாக சொன்னார்கள். அதை பற்றி உங்களுக்கு என்ன அக்கறை? எது விலை ஏறினால் உங்களுக்கு என்ன கவலை..?

    ஓட்டுப் போட்டவன்தான் நடுரோட்டுக்கு வந்து தலையில் மண்ணை அள்ளி போட்டால்தான் அள்ளி போட்டால்தான் இந்த சமூகத்திற்கு புத்தி வரும். ஏசி பஸ் ஸ்டாப் கட்டுனோமே இப்போது அதில் விசிலுக்கு ஓட்டு போட்ட கூட்டம் கஞ்சா அடித்துக் கொண்டிருக்கிறது.

    இவர்களுக்கெல்லாம் திமுகவின் வரலாற்றை பேசினால்தான் தெரியவரும். கருணாநிதியை முதல்வராக மாற்றிய தனது சைதாப்பேட்டை தொகுதியில் அவர் பெரிய மருத்துவமனை கொண்டு வரவில்லை.

    Advertisement

    ஆனால் திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மா.சுப்பிரமணியன் கொண்டு வந்தார். ஆலந்தூரில் இருக்கும் எங்களுக்கெல்லாம் மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்தது. அந்த மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளியின் உறவினர்கள் எல்லாம் ஓட்டு போட்டு தானே தவெக வென்றது.

    அதனால் அவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது என வெளிப்படையாகவே சொல்கிறேன். இனிமேல் மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டும். இனி கட்சிக்காரர்களுக்கு செய்யுங்கள். 5 ஆண்டுகளுக்கு நாம் ஓய்வெடுப்போம்.

    தவெக அரசு குறித்து மக்கள் இப்போதுதான் தெளிய ஆரம்பித்துள்ளார்கள். தமிழகத்தில் ஸ்டாலின் செய்ததை போல் மக்களுக்கு யாரும் செய்யவில்லை. இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

    English Summary

    Sholinganallur TVK MLA ECR Saravanan condemns DMK RS Bharathi as he cursed Saidapet voters who dont get good death.