சட்டசபையில் பதிலுரையின் போது விஜய் நெற்றியில் இருந்த சிகப்பு பொட்டு! யார் வைத்துவிட்டது தெரியுமா?

  • சென்னை: முதல்வர் விஜய் பதிலுரையின் போது நெற்றியில் திடீரென சிகப்பு பொட்டு வைத்திருந்தது குறித்து மக்களிடையே எதிர்பார்ப்பும் ஆர்வமும் இருந்தது. அதாவது கருப்பு பொட்டு வைத்திருந்தவர், திடீரென சிகப்பு பொட்டு வைத்திருக்கிறாரே எதற்காக என்றெல்லாம் விஜய்யை பார்ப்போர் மனதில் எழுந்தது.

    Advertisement

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் மொத்தம் 21 நாட்கள் நடந்து நேற்றைய தினம் முடிந்தது. கடந்த வியாழக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 116 நாட்கள் கொண்ட தவெக அரசில் இடம் பெற்ற குற்றங்களை பட்டியலிட்டு அதற்கு முதல்வர் விஜய் எந்த பதிலையும் கூறாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

    Advertisement

    அப்போது விஜய், "எல்லா கேள்விகளுக்கும் திங்கள்கிழமை பதில் அளிப்பேன். அப்போது யாரும் ஓடிவிடக் கூடாது" என திமுகவை விமர்சித்துவிட்டு அவையில் இருந்து அவர் வெளியேறியிருந்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின், எங்களை ஓடிடக் கூடாது என கூறிவிட்டு அவர் ஓடிவிட்டார்" என கிண்டல் செய்திருந்தார்.

    மேலும் விஜய் பதிலளிக்க 3 நாட்கள் டைம் இருக்கு. நல்லா prepare செய்துட்டு வரட்டும் என்றும் உதயநிதி கூறியிருந்தார். இதனால் விஜய் எந்த மாதிரியான பதிலை அளிப்பார், உதயநிதி ஸ்டாலினின் ரியாக்ஷன் என்ன மாதிரியாக இருக்கும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு எழுந்தது.

    Advertisement

    அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு அவை கூடியதும் முதல்வர் விஜய் பதிலுரை அளித்தார். பொதுவாக அவர் நெற்றியில் கருப்பு நிற பொட்டு வைத்திருப்பார். ஆனால் அன்றைய தினம் சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்திருந்தார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநர் மாளிகை சென்ற போதிலிருந்தே கருப்பு நிற பொட்டு வைத்திருந்தார்.

    அது அரஜகா திலகம் என சொல்லப்பட்டது. இந்த பொட்டை வைத்தால் குலதெய்வமே நம் வீடு தேடி வந்து அருள்புரியும் என்கிறார்கள். அது போல் நேர்மறை சக்திகளை கொடுக்கும், செல்வம் பெருகும், வெற்றிக்கு வித்திடும், கண் திருஷ்டி நீங்கும். இதனால் இந்த பொட்டை ஜோதிடரின் அறிவுரையின் பேரில் அவர் தினமும் வைத்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. அது போல் வலது மணிக்கட்டில் சிகப்பு நிற கயிறும் கட்டியிருக்கிறார்.

    Advertisement

    இந்த நிலையில் பதிலுரையின் போது விஜய் சிகப்பு பொட்டு வைத்திருந்தார். கருப்பு நிறத்தில் இருந்து சிகப்புக்கு மாறிவிட்டாரே என பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டனர். மேலும் அவர் நெற்றியில் வைத்திருந்தது குங்குமமா இல்லை கஜசேகரி திலகமா என தெரியவில்லை.

    கஜகேசரி திலகமும் சிகப்பு நிறத்தில்தான் இருக்கும். எதிரிகளை எதிர்கொள்ள இந்த திலகம் இடுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இது தெய்வீக பாதுகாப்பை வழங்குவதாகவும் நம்பப்படுகிறது.

    இந்த நிலையில் அவர் வைத்திருந்த பொட்டு என்ன என்பது தெரியவந்துள்ளது. அதாவது எம்எல்ஏ சத்யபாமா, விஜய்க்கு இட்டுவிட்ட குங்குமமாம்.

    பதிலுரைக்காக கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டு விஜய்க்கு இட்டு விட்டாராம். சட்டசபைக்கு வந்ததுமே விஜய்யிடம் கேட்டு அந்த பொட்டை சத்யபாமா வைத்துவிட்டாராம். சத்யபாமா செங்கோட்டையனின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் வெளியேறிய போது சத்யபாமாவும் வெளியேறி தவெகவில் இணைந்தார். அவர் அமைச்சராக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதில் அந்த வாய்ப்பு கமலிக்கு கிடைத்ததாக தகவல்கள் சொல்கின்றன.

    English Summary

    TVK MLA Sathyabama put red Kumkum for CM Vijay on his reply in Tamil nadu Assembly. He has already having black colour aragaja thilam on his fore head.