சென்னை ஹோட்டலில் அசோக் சதி.. தவெக எம்எல்ஏக்கள் பேரம்.. நீதிமன்றத்தில் காவல்துறை அதிர்ச்சி தகவல்

  • சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததால் தவெக குதிரை பேரம் நடத்துவதாக திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய புகாரில் ஐபிடிஎஸ் நிறுவனத்தின் திருநாவுக்கரசு, செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மீது காவல்துறை வழக்கு செய்தது.

    Advertisement

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக செந்தில் பாலாஜி தலைமறைவாக உள்ளார். அவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் காவல்துறை பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியது. இந்த சதியில் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்டுள்ளார். சென்னை ஹோட்டலில் இதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டது. இதற்கான சிசிடிவி காட்சிகள் இருந்தன. சிங்கப்பூரில் இருந்தபடி சிசிடிவி காட்சிகளை அழித்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளனர்.

    Advertisement

    தவெக எம்எல்ஏ பேரம்

    காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில், "சட்டவிரோத ஹவாலா பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள ஹோட்டலில் இதற்கான சதித்திட்டம் அரங்கேறியுள்ளது. எம்எல்ஏக்களுக்கு லஞ்சம் வழங்க சென்னையின் பல்வேறு பகுதிகளில் சதித்திட்டம் நடைபெற்றது. கிண்டி நட்சத்திர ஹோட்டல், ஈசிஆர் ஹோட்டலில் இதற்கான ஆலோசனை நடைபெற்றுள்ளது. ஊத்தங்கரை எம்எல்ஏவுடன் மேலும் 10 எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்பட்ட முடிவு செய்யப்பட்டது.

    எம்எல்ஏக்களுக்கு ரூ.35 கோடி, இடைத்தரகர்களுக்கு ரூ.5 கோடி கொடுக்க திட்டமிடப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் உள்ளன. கைதானவர்களுடன் அசோக்குமார் 40 முறை உடன் இருந்துள்ளார். 3 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து இந்த சதி நடைபெற்றுள்ளது. அசோக்கும் அவர்களுடன் ஹோட்டலில் இருந்துள்ளார். அவரே ஹோட்டல் புக் செய்த சதி செய்துள்ளார். வழக்கின் முக்கிய குற்றவாளி சிங்கப்பூர் தப்பியோடிவிட்டார்.

    Advertisement

    அதிர்ச்சி ஆவணங்கள்

    சிங்கப்பூரில் இருந்தபடி சென்னை சிசிடிவி காட்சியை அழிக்க வைத்துள்ளார். இது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி அல்ல. ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சி. பெங்களூரில் ஹவாலா பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. இதற்கான முழுமையான ஆதாரம் கிடைத்துள்ளது. இதில் செந்தில் பாலாஜி சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. கைதானவர்களும் செந்தில் பாலாஜி, அவரின் தம்பி அசோக் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்" என்று வாதிட்டனர்.

    English Summary

    TVK MLA trade case, Senthil Balaji brother Ashok was planned in Chennai hotel said police.