“ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெக தான் என மக்கள் சொல்றாங்க” - CPIM சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!

  • சென்னை: "இடைத்தேர்தலில் தவெகவே ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பதாக வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். 'தூய சக்தி... வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம்" என முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்கிறார். இது குறித்து சம்மந்தப்பட்ட தலைவர்கள் பதிலளிக்க வேண்டும்" என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.

    Advertisement

    எந்தெந்த கட்சியெல்லாம் பணம் கொடுத்துள்ளது என மக்களிடம் கேட்டால், இருக்கிறதிலேயே அதிகமாக தவெக கொடுத்ததாக வாக்காளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தூய சக்தி என முதலமைச்சர் பிரச்சாரம் செய்கிறார் என விமர்சித்துள்ளார் பெ.சண்முகம்.

    Advertisement

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடப்பதாக கூறப்படுகிறது. தவெக சார்பில் ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவதாக பகிரங்கமாக குற்றச்சட்டை முன்வைத்துள்ளார் சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்.

    பெ.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேற்றைக்கு நான் மதுராந்தகம் போயிருந்தேன். நாங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும் போட்டியிடுவது எல்லோருக்கும் தெரியும். நேற்று மதுராந்தகத்தில் பல கிராமங்களுக்குச் சென்றிருந்தபோது, நாங்கள் வெறும் நோட்டீஸை மட்டும் கொடுக்கிறோம். எதற்காக நாங்கள் போட்டியிடுகிறோம், எந்தக் கொள்கைக்காக நாங்கள் இருக்கிறோம், ஏன் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான நோட்டீஸை வழங்கித்தான் நாங்க வந்து ஓட்டு கேட்கிறோம்.

    Advertisement

    ஆனால், சில கிராமங்களில் மக்கள் தெரிவித்தது... 'மற்றவர்கள் எல்லாம் பணம் கொடுக்கிறார்கள். நீங்கள் வெறும் நோட்டீஸை மட்டுமே கொடுக்கிறீர்களே' என்று அவர்கள் தெரிவித்தார்கள். நான் அவங்ககிட்ட கேட்டேன், 'எந்தெந்த கட்சியெல்லாம் பணம் கொடுத்திருக்காங்க?' இருக்கிறதிலேயே அதிகமாக தவெக கொடுத்ததாக வாக்காளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    தூய சக்தி, நாங்கள் எந்தவிதமான இந்த மாதிரி வாக்குகளுக்கெல்லாம் பணம் கொடுக்க மாட்டோம் என்றுதான் கடந்த தேர்தலிலும் முதலமைச்சர் பிரச்சாரம் செய்தார். இப்பொழுதும் பிரச்சாரம் செய்கிறார். இது பொதுமக்கள் கொடுத்த வாக்குமூலம். இருப்பதிலேயே அதிகமாக கொடுத்திருப்பது தவெக. 'நீங்க அந்த அளவுக்கு உங்களால் கொடுக்க முடியாது, கொஞ்சமாவது கொடுங்க' அப்படின்னு எங்களோடு பேரம் பேசுகிற ஒரு நிலைமையை வாக்காளர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

    Advertisement

    நாங்க சொல்லிட்டோம், 'எங்களுடைய பலம், எங்களுடைய போராட்ட பலம், எங்களுடைய கட்சியினுடைய பலம், உழைப்பாளி மக்கள் எங்கள் முன்னால்... எங்கள் பின்னால் இருக்கிறார்கள். நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம்' என்று. என்றைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடதுசாரிகளோ பணம் கொடுத்து நாங்கள் வாக்குகளைப் பெறமாட்டோம் என்பதை நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

    ஆனால் மற்றவர்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என்கிற செய்தி களத்திலிருந்து வருகிறது. இதற்குச் சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தலைவர்களும் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

    English Summary

    "Voters report that TVK is offering the highest amount of money per vote in the by-election. Yet, Chief Minister Vijay campaigns with the message, ‘A pure force... we will not pay for votes.’ The concerned leaders must respond to this," said CPIM State Secretary P Shanmugam.