உடைஞ்ச கண்ணாடிய போட்டுக்கிட்டு தவெக அலட்டல்! ஜோதிடர் பேச்சைகேட்டு CM அறையை மாற்றாதீங்க: தராசு ஷ்யாம்

  • சென்னை: ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு எதையும் செய்யக்கூடாது.. ஜோதிடம் என்பது ஒரு ஆறுதல் தரும் பழங்கால அறிவு அதாவது Soothing Science மட்டுமே தவிர, அது ஒருபோதும் 100% சரியாக இருக்க முடியாது.. ஜோதிடர்கள் சொல்வதை நம்பி CM அறையை மாற்றுவதோ அல்லது தலைமைச் செயலகத்தை மாற்றுவதோ ஆபத்தானது" என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    பிரபல சேனல் ஒன்றில் பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் சூழல் மற்றும் இந்தியா டுடே - சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. அரண்மனை சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு சொந்த வீட்டு அடுப்பை அணைத்துவிட்டு சென்றால் அது சர்வநாசத்தில்தான் முடியும்" என்பார்கள்..

    Advertisement

    தவெக மைனாரிட்டி அரசு

    தவெக என்பது மைனாரிட்டி அரசு.. மெஜாரிட்டி கிடையாது.. காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் வண்டி ஓடாது.. காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளுக்கும் தேசிய அளவில் பல ஆப்ஷன்கள் திறந்திருக்கின்றன.. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இதுவே முதல்முறை என்பதால், அதற்கான ஒருங்கிணைப்புக் கூட்டங்களோ அல்லது குறைந்தபட்ச பொதுத் திட்டமோ இன்னும் முறையாக தொடங்கப்படவில்லை..

    தவெகவினர் கேரளா, தெலுங்கானா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் காலூன்ற முயன்றால், அங்குள்ள காங்கிரஸ் மற்றும் இதர பிராந்தியக் கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும்.. சட்டமன்றத்தில் அமைச்சர்கள் நன்றி தெரிவிக்கும் விவகாரத்திலும் தவெகவின் நிலைப்பாடு மாறுபடுகிறது..

    Advertisement

    ஜோதிடர்களின் பேச்சு

    ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு எதையும் செய்யக்கூடாது.. ஜோதிடம் என்பது ஒரு ஆறுதல் தரும் பழங்கால அறிவு அதாவது Soothing Science மட்டுமே தவிர, அது ஒருபோதும் 100% சரியாக இருக்க முடியாது.. ஜோதிடர்கள் சொல்வதை நம்பி CM அறையை மாற்றுவதோ அல்லது தலைமைச் செயலகத்தை மாற்றுவதோ ஆபத்தானது//

    அகில இந்திய அரசியலுக்கு ஆசைப்பட்டு தெலுங்கானாவில் பிஆர்எஸ் கட்சியாக மாற்றினார் சந்திரசேகர ராவ் மற்றும் ஜெயலலிதா காலத்து நிகழ்வுகளை உதாரணம் காட்டி, தவெக தற்போதைய நிலையில் தன்னை அதிகமாக மதிப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்று எச்சரித்தார்.

    Advertisement

    அகில இந்திய அரசியலுக்கு ஆசைப்பட்டு தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது கட்சியை பிஆர்எஸ் (BRS) என மாற்றினாரே அது என்ன ஆனது என்று அனைவருக்குமே தெரியும்.. ஜெயலலிதா காலத்து நிகழ்வுகளிலும் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும்..

    ஓட்டைக் கண்ணாடி

    தவெக இப்போதே தன்னை ஓவராக மதிப்பிட்டுக் கொள்ளக் கூடாது.. ஓடிடி யுகத்தில் அனைத்து மொழிப் படங்களும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுவதால் வட இந்திய நடிகர்களின் முகங்கள் நமக்குத் தெரிவது போல, விஜய்க்கும் சினிமா மூலம் ஒரு முகப்பரிச்சியம் இருக்குமே தவிர, அதற்காக வட இந்தியாவில் மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்பது முற்றிலும் தவறான கற்பனை..

    Advertisement

    தவெக வெற்றி பெற்றதில் பெரும்பான்மையானவர்கள் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த பிறகட்சி எம்எல்ஏக்கள் தான் என்றும், அவர்கள் எந்தச் செலவும் செய்யாததால்தான், தவெகவுக்கு ஓட்டு விழுந்தது, ஜாதி அடிப்படையில் ஓட்டுப் போடவில்லை என்று விஜய் சொல்வதும் தவறு.. தங்களுக்கு அந்தந்த தொகுதிகளில் ஜாதி அடிப்படையில் தான் ஓட்டு கிடைத்துள்ளது என்பதை விஜய் உணர வேண்டும்..

    கவுண்டமணி ரஜினிகாந்தை பார்த்து ஒரு படத்தில் சொல்வாரே, "ஓட்டை கண்ணாடியை போட்டுக்கிட்டு இந்த அலட்டல் அலட்டுறயே, ரொம்ப தைரியம் உனக்கு" என்று சொல்வாரே அதுபோலதான் இப்போதுள்ளவைகள் நடந்து கொண்டிருக்கின்றன" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்

    English Summary

    TVK Overconfidence.. Tarasu Shyam Warns Vijay Against Astrology Based Decisions and Changing CM Room