விசிகவை வெறுப்பேற்றும் விஜய்! பாமக - தவெக கூட்டணி.. சிறுத்தைகளுக்கு ’விசில்’ கொடுத்த மறைமுக மெசேஜ்!

  • சென்னை: இடைத்தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது கூட்டணி குறித்த தகவல்கள் தான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தவெக - பாமக கூட்டணி அமையலாம் என சொல்லப்படும் தகவல் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. தற்போதைய ஆளும் தவெக கூட்டணியில் எவ்வித சிக்கலும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டாலும், மறைமுகமாக புதிய கூட்டணிக்கான அச்சாரங்கள் போடப்பட்டு வருவதாக சொல்கின்றனர்.

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார் விஜய்.

    Advertisement

    இந்த கூட்டணியில், காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு இரண்டு தலா இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதே நேரத்தில் பொதுவெளிகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் அறிக்கை வாயிலாகவும் விஜய் அரசை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    குறிப்பாக பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் நேரடியாக போராட்டத்தில் குதித்திருப்பது விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டதும் விஜய் செல்வாக்கை சற்று சரிய வைத்துள்ளது. கூட்டணி கட்சிகளின் அருப்தியை விஜய் சம்பாதித்திருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

    ராகுல் பேசும்போதே கிளம்பிய மாணவிகள்.. காங்கிரஸ் கட்சியினர் சொன்னதால் வெளியே விடாமல் தடுத்த போலீசார்!
    Advertisement

    இதன் காரணமாக மாற்று வாய்ப்பாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஜருராக தொடங்கி இருக்கிறது என்கின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியவருடன் சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் பேசி வருகிறார்களாம். பாமக கூட்டணிக்குள் வந்தால் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என திட்டவட்டமாக திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு பொதுவெளியிலேயே தெரிவித்திருக்கின்றனர்.

    கூட்டணியே அமையாத போது எதற்கு விசிக-வுக்கு இவ்வளவு கோபம் என விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்தது. ஏற்கனவே சொன்னது போல கூட்டணியில் இருந்து கொண்டே சில விவகாரங்களில் அரசுக்கு எதிராக பேசுவதை விஜய் விரும்பவில்லை என்கின்றனர். மேலும் இரண்டு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்திருக்கும் நிலையில், நான்கு எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் பாமகவை கூட்டணிக்கில் கொண்டு வந்தால் இரண்டு கட்சிகளின் நெருக்கடி குறையும்.

    Advertisement

    ஒரு கட்சியின் அதிருப்தியை சமாளிப்பது எவ்வளவோ மேல் என்பதுதான் விஜயின் எண்ணமாக இருக்கிறது. அதே நேரத்தில் பாமக தரப்பில் பெரிய அளவிலான பதவிகளை எதிர்பார்ப்பதாகவும், அதனால்தான் கூட்டணி அமையவில்லை என தமிழக வெற்றிக் கழகத்தினர் கூறுகின்றனர். ஆனால் 99 சதவீதம் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றே பாமக தரப்பினரும் கூறுகின்றனர். இதற்கு இடையே விசிகவை வெறுப்பேற்றுவதற்காகவே தமிழக வெற்றி கழக தரப்பில் பாமக கூட்டணி தொடர்பான தகவல்கள் கட்சியை விடப்படுகிறது என்றும் சொல்கின்றனர்.

    English Summary

    Reports of a possible TVK-PMK alliance have sparked political debate, with VCK leaders warning they may quit if PMK joins the ruling coalition.