சென்னை: தமிழக வெற்றி கழகத்துக்கு இன்னும் ஒரு அரசியல் கட்சி ஆதரவு தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. 4 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி விஜய் அரசுக்கு ஆதரவு தர இருப்பதாகவும், அந்த கட்சியைச் சேர்ந்த சௌமியா அன்புமணி அமைச்சராகப் போவதாக தகவல்கள் உலாவுகின்றன. பள்ளிக்கல்வித்துறை, சுற்றுச்சூழல் அல்லது வனம் ஆகியவற்றி ஏதாவது ஒன்று சௌமியா அன்புமணிக்கு ஒதுக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் களத்தில் பரபரப்பு கிளப்பி இருக்கிறது
2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணிகள் வேகமாக மாறி வருகின்றன. காரணம் அந்த தேர்தலில் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை கைப்பற்றி முதல்வராக பதவியேற்றிருக்கிறர் விஜய்.
தவெகவுக்கு தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக, க்உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான அதிமுகவில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர். இந்த சூழலில், வட மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் புதிய கூட்டணி வாய்ப்ப்கள் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றது. சென்னையைச் சுற்றியுள்ள 38 தொகுதிகளில் 34 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. அதே நேரத்தில், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் தவெகவின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. குறிப்பாக வன்னியர் சமூகத்தின் வாக்குகள் கணிசமாக உள்ள மாவட்டங்களில் பாமகவின் அரசியல் செல்வாக்கு தவெகவை மட்டும்படுத்தியது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த தேர்தலில் அதிமுக கணிசமான இடங்களை கைப்பற்றியதற்கு பாமக உடனான கூட்டணி முக்கிய காரணமாக இருந்தது. இதனால் தான், பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதன் மூலம் வட மாவட்டங்களில் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த முடியும் என தவெக கருதுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் ஆதவ் அர்ஜுனா மற்றும் செங்கோட்டையன் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருவதாக தவெக வட்டாரங்களை சொல்கிறது. மேலும், அதிமுக எம்.எல்.ஏ ஒருவரே இந்த பேச்சுவார்த்தயில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. கட்சியை வலுப்படுத்துவது மட்டுமல்லாது ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கும் பாமக கூட்டணிக்குள் வருவது அவசியம் என தமிழக வெற்றி கழகம் கருதுகிறது. தற்போது 117 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தாலே விஜய் ஆட்சியை நடத்தி விடலாம். தேர்தலுக்கு பிறகு கூடுதலாக 1 அல்லது 2 எம்எல்ஏ ஆதரவு கிடைக்கும். ஒருவேளை கம்யூனிஸ்டுகளும், விடுதலை சிறுத்தைகளும் கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் பாமக ஆதரவு தரும்போது ஆட்சியை நிலையாக நடத்த முடியும் என்பது தான் விஜயின் திட்டம். இதற்காக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கூட்டணியை உறுதி செய்வதற்காக பாமகவுக்கு ஒரு அமைச்சர் பதவி தரப்படுகிறது. குறிப்பாக சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவியை தர விஜய் சம்மதித்திருப்பதாக சொல்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை அல்லது சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றில் ஏதாவது ஒரு துறை சௌமியா அன்புமணிக்கு ஒதுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. கூட்டணிக்குள் விடுதலை சிறுத்தைகள் இருப்பதால் பாமக வர தயங்கினாலும், வேறு சில திட்டங்களும் முதல்வர் விஜய்யின் டேபிளில் இருக்கிறதாம். அதே நேரத்தில் பாமக கூட்டணிக்கு வருவது உறுதி.. இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்கின்றன தவெக வட்டாரங்கள்.தமிழக வெற்றிக் கழகம்
தவெக பாமக கூட்டணி
வன்னியர் வாக்குகள்
ஆதவ் அர்ஜுனா
பாமக கூட்டணி
சௌமியா அன்புமணி
முதல்வர் விஜய்