தபால் வாக்கில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தவெக.. ஒரே வரியில் ஸ்டாலின் கொடுத்த நறுக் பதில்

  • சென்னை: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும் தபால் வாக்குகளில் திமுகவே முதலிடம் பெற்றது. இரண்டாம் இடத்தை அதிமுக பிடித்தது. மூன்றாம் இடம் தான் தவெகவுக்கு கிடைத்தது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் ஒரே வரியில் நறுக்கென பதில் அளித்தார்.

    Advertisement

    இடைத்தேர்தல் தபால் வாக்குகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. தவெக வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அதிருப்தியை காரணமாக எடுத்துக்கொள்ளலாமா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மு.க ஸ்டாலின், "எல்லாவற்றிற்கும் நீங்களே பதில் சொல்லிட்டீங்க" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

    Advertisement

    தாராபுரம் தொகுதி தபால் வாக்குகள்

    தாராபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில், திமுக - 613 வாக்குகள், அதிமுக - 406 வாக்குகள், தவெக - 255 வாக்குகள், நாதக -19 வாக்குகள் மற்றும் சிபிஐ - 7 வாக்குகள் பெற்றன.

    மதுராந்தகம் தொகுதி தபால் வாக்குகள்

    மதுராந்தகம் தொகுதியில், தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 358 வாக்குகளும் , அதிமுக 322 வாக்குகளும், தவெக 136 வாக்குகளும் பெற்றன. இரு தொகுதியிலும் தவெகவுக்கு மூன்றாம் இடமே கிடைத்தது.

    இடைத்தேர்தல் முடிவுகள்

    நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தவெக சார்பில் மீண்டும் சத்தியபாமா, மரகதம் குமரவேல் வேட்பாளராக களமிறங்கினர்.

    Advertisement

    தேர்தல் முடிவில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 54,008 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 47,450 வாக்குகள் பெற்று 3 ஆம் இடமும் பிடித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,709 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார்.

    திமுகவுக்கு வாக்கு சதவீதம் பெரிய அளவில் குறையவில்லை

    இதே போன்று தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா 66,841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அதிமுகவின் பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா 5,268 வாக்குகள் பெற்றார்.

    Advertisement

    இரண்டு தொகுதியிலும் திமுக தோல்வியை தழுவினாலும் இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும் கடந்த பொதுத்தேர்தலை விட பெரிய அளவில் வாக்கு சதவீதம் சரியவில்லை. கடந்த பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அமுலு பொன்மலர் 59,838 வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருந்தார். ஆனால் இந்த தேர்தலில் 54,008 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார். பொதுத்தேர்தலில் 30.18 சதவீதம் கிடைத்த நிலையில் இடைத்தேர்தலில் 29.15 சதவீதம் கிடைத்துள்ளது. 1.03 சதவீதம் மட்டும் வாக்குசதவீதம் சரிந்துள்ளது.

    தாராபுரம் இடைத்தேர்தல்! பேரூராட்சிகளில் அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிய தவெக! இதை கவனிச்சீங்களா?
    Advertisement

    கூட்டணி இல்லாமலே அசத்தல்

    தாராபுரம் தொகுதியை எடுத்துக்கொண்டால் கடந்த பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64,373 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தை பிடித்திருந்தார். இப்போது சுகன்யா 57,370 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார். பொதுத்தேர்தலில் வாக்கு சதவீதம் 32.20 என்று இருந்த நிலையில் தற்போது 31.78 ஆகும். பொதுத்தேர்தலை விட 0.42 சதவீத வாக்கு சதவீதம் மட்டுமே திமுகவுக்கு குறைந்துள்ளது.

    ஆனால் கடந்த தேர்தலில் திமுக காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம் லீக் என 21 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும் கூட திமுகவுக்கு பெரிய அளவில் வாக்கு சதவீதம் சரியவில்லை. இந்த 2 தொகுதிகளிலும் தபால் ஓட்டில் திமுக முத்திரை பதித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் பதிவான 864 தபால் வாக்குகளில் 358 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் பதிவான 1,316 தபால் வாக்குகளில் 613 வாக்குகளையும் திமுக வேட்பாளர்கள் பெற்றனர்.

    Advertisement
    செத்த பாம்பாக அதிமுக.. ஏக நெருக்கடியில் எடப்பாடி! மீண்டும் ஒன்று கூடும் வேலுமணி & கோ! மெகா ப்ளான்!

    3 ஆம் இடத்தில் அதிமுக

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் சேர்த்து அதிமுக கடந்த பொதுத்தேர்தலை விட 59,070 வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது. மதுராந்தகத்தில் 23,250 வாக்குகளையும், தாராபுரத்தில் 35,820 வாக்குகளையும் அக்கட்சி இழந்துள்ளது.

    இரு தொகுதிகளிலும் அதிமுக 3 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. மதுராந்தகத்தில் கடந்த தேர்தலில் 69,284 வாக்குகள் பெற்றிருந்தது. இப்போது 47,450 வாக்குகள் மட்டுமே பெற்றது. அதேபோல தாராபுரத்தில் கடந்த பொதுத்தேர்தலில் 81,100 வாக்குகள் பெற்றது. ஆனால் இப்போது 45,280 வாக்குகள் மட்டுமே பெற்றது.

    English Summary

    Even though TVK candidates won the by-elections in Dharapuram and Maduranthakam, the DMK secured the top spot in postal votes. The AIADMK took second place, while the TVK finished third. Reporters questioned former Chief Minister and DMK leader M.K. Stalin about this.