இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!

  • சென்னை: தமிழக அரசியலில் கடந்த மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. குறிப்பாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் களம் முற்றிலும் மாறிவிட்டது. ஆட்சியை கைப்பற்றிய தவெக, தற்போது உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதில் அதிகம் அடிபடப் போவது அதிமுக தான் என்கின்றனர்.. மேலும் இது எடப்பாடிக்கும் மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

    Advertisement

    கடந்த சில வாரங்களாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். இதனால் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளது.

    Advertisement

    இந்த நிலையில், நிர்வாகிகள் தாவலை எப்படி தடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இதுதான் முக்கிய விவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    தவெக

    குறிப்பாக தவெகவுக்கு செல்லும் நிர்வாகிகளை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன. அதிமுக தற்போது சந்திக்கும் நெருக்கடி ஒரே நாளில் உருவானது அல்ல. கடந்த ஏழு ஆண்டுகளாக ஏற்பட்ட அரசியல் முடிவுகளின் விளைவுதான் இன்றைய நிலைமை என்கின்றனர் அதிமுகவினர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற எந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என தொடர்ச்சியான பின்னடைவுகளை சந்தித்துள்ளது.

    Advertisement

    அதிமுக நெருக்கடி

    இதற்கிடையில் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டி, தொடர் பிளவுகள் மற்றும் தலைமை சந்தித்த சிக்கல்கள் தொண்டர்களிடையே விரக்தியை உருவாக்கியது. அதிலும் குறிப்பாக, தமிழக அரசியலில் புதிய சக்தியாக விஜய் உருவெடுத்ததை அதிமுக சரியாக மதிப்பிடவில்லை என்ற விமர்சனம் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. விஜயின் அரசியல் வருகை ஆரம்ப கட்டத்தில் இருந்தபோதே அதனை தீவிரமாக எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்ததாக பலர் கருதுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமி

    ஆனால் அதிமுக தரப்பில் நீண்ட காலமாக திமுகவையே முதன்மை எதிரியாகக் கருதி அரசியல் நடத்தப்பட்டது. தற்போது கூட அதே நிலைப்பாட்டில்தான் கட்சி இருப்பதாக தெரிகிறது. நேற்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுகதான் நமது பிரதான எதிரி; தவெக அல்ல" என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தவெகவை நேரடியாக தாக்காமல் இருக்க வேண்டும் என்ற அரசியல் முடிவை அவர் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    தவெக ஆட்சி

    ஆனால் இதுவே கட்சிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது அதிமுகவில் இருந்து அதிகமானோர் தவெகவை நோக்கிச் செல்வது தான் உண்மையான சவாலாக இருக்கிறது என்று சில நிர்வாகிகள் கருதுகின்றனர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரம் மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்த பலரிடமும் கவலை ஏற்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் தமிழக அரசியலில் தவெக முக்கிய சக்தியாக தொடரும் என்ற நம்பிக்கை காரணமாகவே பலர் அந்தக் கட்சியை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

    உள்ளாட்சித் தேர்தல்

    முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கட்சியில் வாய்ப்பு கிடைக்காத நிர்வாகிகள் மற்றும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தவெகவை மாற்று அரசியல் தளமாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் அதிமுக தலைமை முன் இரண்டு பெரிய சவால்கள் உள்ளன. ஒன்று, தற்போதுள்ள நிர்வாகிகளை கட்சியில் தக்க வைத்துக்கொள்வது. மற்றொன்று, தொண்டர்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவது.

    Advertisement

    தேர்தல் தோல்வி

    அதற்காக கட்சி அமைப்பை வலுப்படுத்துதல், இளைஞர்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்குதல், புதிய தலைமுறையை அரசியலுக்குள் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகள் அவசியம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக வெறும் எதிர்க்கட்சியாக மட்டுமல்லாமல், தனது அரசியல் அடையாளத்தையே மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சவாலை எடப்பாடி பழனிசாமி எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

    English Summary

    AIADMK faces growing pressure as leaders join TVK ahead of local body elections, raising questions over EPS’s next political strategy.