நான் ஒரு அமைச்சர்! எனக்கே இந்த நிலையா? விஜய் கையை காட்ட வேண்டும்! தாம்பரம் சரத்குமார் வேதனை

  • சென்னை: சட்டசபைத் தேர்தலில் வென்று அமைச்சராகியும் கூட மக்களுக்கு எதுவும் பண்ண முடியவில்லை, உள்ளாட்சி பிரதிநிதிகள் தடுத்து நிறுத்துவதாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடப்பேரி திருநீர்மலை மெயின் ரோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞர் ஆகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    Advertisement

    இதில் சிறப்பு அழைப்பாளராக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டு தையல் மிஷின்கள், அரிசி மூட்டைகள் மற்றும் ஹாட் பாக்ஸை பொதுமக்களுக்கு வழங்கினார்.

    அப்போது பேசிய அமைச்சர் சரத்குமார் நான் தாம்பரத்தில் எம்எல்ஏவாக இருந்து வருகிறேன். அதே நேரத்தில் அமைச்சராக இருந்து வரும் நிலையில் என் தாம்பரம் தொகுதி மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.

    ஏதாவது சொல்லி அதிகாரியை செய்ய வைத்தால், அதிகாரியை திருப்பி அனுப்புகின்றனர். ஏனென்றால் தற்போது உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அதை தடுத்து நிறுத்துகிறார்கள். மக்கள் தங்களை தான் கவுன்சிலராக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் எனக் கூறி பணிகளை தடுத்து நிறுத்துகிறார்கள். எனவே வரும் மாநகராட்சித் தேர்தலில் விஜய் யாரை கைகாட்டுகிறாரோ அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் வேதனை தெரிவித்தார்.

    Advertisement

    தமிழகத்தில் 108 இடங்களில் வென்ற தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தது. தற்போது உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்படும். கடந்த முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவே பெரும்பாலான நகராட்சிகளை கைப்பற்றியது. இது மட்டுமல்லாமல் 7 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தலும் நடத்தப்பட வேண்டியது உள்ளது.

    அது போல் முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதலே சென்னை மாநகராட்சி மேயர் என்ற முறையில் ஆர்.பிரியா, விஜய்யை மரியாதை நிமித்தமாக சந்திக்காதது பேசும் பொருளாகியுள்ளது. கிட்டதட்ட 2 மாதங்களாகியும் இதுவரை சந்திக்கவில்லை. பெரம்பூர் சட்டசபை தொகுதி அலுவலகம் திறப்பு விழாவுக்கும் பிரியா வரவில்லை, இது குறித்து கேட்டதற்கு "அழைப்பில்லை அதனால் வரவில்லை" என தெரிவித்திருந்தார்.

    Advertisement

    தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது இந்த உள்ளாட்சியின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடையும் என தெரிகிறது.

    English Summary

    Minister Sarathkumar says that despite he was appointed as minister, as because of ward councilors and mayor, he could not do welfare for the Tambaram people.