ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி.. சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமித்த முதல்வர் விஜய்!

  • சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் தவெகவில் இணைந்த ஃபெலிக்ஸ் ஜெரால்ட் அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார்.

    Advertisement

    முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த பலருக்கும் முக்கிய பொறுப்புகள், பதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தவெகவை சார்ந்த யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    மூன்று ஆண்டுகள் அவர் இந்த பதவியை வகிப்பார் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக கத்தோலிக்க திருச்சபை பாதிரியார் ஜோ அருண் செயல்பட்டு வந்தார். அதற்கு முன்பாக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் இருந்து வந்தார்.

    இந்நிலையில் தான் தற்போது தவெக ஆட்சியில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து, டிசம்பர் மாதம், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் ஃபெலிக்ஸ் ஜெரால்ட். இவர் ரெட் பிக்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். கட்சியில் இணைந்ததுமே, தேசியப் பத்திரிகை செய்தித் தொடர்பாளர் பதவியை ஃபெலிக்சுக்கு வழங்கினார் விஜய்.

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். இது, சிறுபான்மையினர் மீதான புகார்களை விசாரித்தல், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்தல், மற்றும் சமூக நீதி தொடர்பான கொள்கைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்கிறது. இந்த ஆணையத்தின் தலைவர் பதவி சிறுபான்மையினர் சமூகங்களின் பிரச்சனைகளை நேரடியாக அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலமாகும்.

    English Summary

    YouTuber Felix Gerald has been appointed as the Chairman of the Tamil Nadu State Minorities Welfare Commission. Felix Gerald, who joined the TVK last December, has been serving as the party's national spokesperson.