நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல்.. தவெகவிற்கு சிக்கல்! திமுக கையில் எடுத்த அஸ்திரம்.. ECக்கு கடிதம்

  • சென்னை: பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை நட்சத்திர பேச்சாளர்களாக தவெக பட்டியல் கொடுத்துள்ளது விதிகளை மீறிய செயல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த பட்டியலை ரத்து செய்ய வேண்டும், தவெக மீது தேர்தல் நடத்தை விதியின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திற்கு திமுக தரப்பில் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    Advertisement

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவும் நிலையில், அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சார்பில் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆளும் தவெக வெளியிட்ட நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களான மாணிக்கம் தாகூர், திருமாவளவன், காதர் மொய்தீன் ஆகியோரது இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தேர்தல் ஆணைய விதிகளுக்கு மாறாக கூட்டணி கட்சி தலைவர்களையும் தவெக பிரச்சாரகர்கள் பட்டியலில் இணைத்து வெளியிடப்பட்டு இருப்பதாக புகார்கள் கிளம்பியுள்ளன. மக்கள் பிரதிநித்துவ சட்டத்தில் 1951-ன் பிரிவு 77(1) விதிகளை மீறும் வகையில் தவெக சமர்பித்த பட்டியல் இருப்பதால் அதனை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

    அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு திமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தவெகவை சாராத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர், விசிகவை சேர்ந்த திருமாவளவன், வன்னி அரசு, ரவிக்குமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஐயூஎம்.எல் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் தவெகவின் நட்சத்திர பேச்சாளர்களாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    Advertisement

    ஒரு அரசியல் கட்சி தனது சொந்தத் தலைவர்களையும் அலுவலகப் பொறுப்பாளர்களையும் மட்டுமே நட்சத்திரப் பிரச்சாரகர்களாக நியமனம் செய்ய முடியும். மற்றொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர்களை ஒரு கட்சி தனது சொந்த நட்சத்திரப் பிரச்சாரகர்களாகப் பட்டியலிட எந்த விதிகளும் இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 77-ஐ மீறி வெளியிடப்பட்ட தவெக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை திரும்ப பெற வேண்டும்.

    பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தவெகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால், அந்த செலவுகளை, வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்குகளில் முழுமையாகச் சேர்க்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். சட்ட விதிகளுக்கு முரணாக பட்டியலை சமர்ப்பித்ததற்காக தவெக மீது நடத்தை விதிமுறைகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    TVK star campaigner: Opposition parties have alleged that TVK’s inclusion of members from other parties in its list of star campaigners violates regulations; consequently, the DMK has written to the Election Commission urging the cancellation of this list and demanding appropriate action against TVK under the Model Code of Conduct.