தவெக பலம் 109 ஆக உயர்வு.. இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் இனி விஜய்க்கு நோ டென்ஷன்!

  • சென்னை: இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் தவெகவின் பலம் 109 ஆக அதிகரித்துள்ளது. தவெக கூட்டணி ஆட்சிக்கு தற்போது இடதுசாரிகள் ஆதரவு அளிக்காமல் வெளியேறினாலும் ஆபத்து இல்லை என்ற சூழல் நிலவுகிறது.

    Advertisement

    ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டபை பொதுத்தேர்தலில் தவெக 108 இடங்களைப் பிடித்திருந்தது. முதல்வர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் வென்றதால், விதிமுறைப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார். திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதனால் தவெக-வின் பலம் 107 ஆகக் குறைந்தது.

    Advertisement

    தவெக அரசுக்கு ஆதரவு

    தனிப் பெரும்பான்மைக்கு (234 இடங்களில்) 118 இடங்கள் தேவை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக. திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 5 தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. தற்போது எம்.எல்.ஏக்கள் இருக்கும் தொகுதிகள் மொத்தம் 229 மட்டுமே.

    மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையில் 2 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது தவெகவின் தனிப்பட்ட பலம் 109 ஆக அதிகரித்துள்ளது.

    Advertisement
    பாமக தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்.. கூட்டணி கணக்கை மாற்றுகிறதா தவெக?

    கூட்டணி ஆட்சிக்கு கட்சிகளின் ஆதரவு

    தவெக பலம்: 109

    காங்கிரஸ்: 5

    விசிக: 2

    ஐ.யூ.எம்.எல்: 2

    இந்திய கம்யூனிஸ்ட் (CPI): 2

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM): 2

    மொத்தம்: 122

    தவெகவுக்கு எதிராக.. போராட்டக்களத்தில் இறங்கும் இடதுசாரிகள்! பெரிய சிக்கலில் விஜய்!

    இடதுசாரிகள்

    சட்டமன்றத்தில் 59 இடங்களை வைத்துள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக வலுவாக உள்ளது. திமுக கூட்டணியில் முன்பு இருந்த இடதுசாரி கட்சிகள் தற்போது விஜய்க்கு 'வெளியில் இருந்து' ஆதரவு அளித்து வருகின்றன. பல்வேறு விவகாரங்களில் இடதுசாரிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    Advertisement

    தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலில், தவெக உடன் முரண்பட்டு, தனித்துக் களமிறங்கியது இடதுசாரி கட்சிகள். 2 தொகுதிகளிலும் சுமார் 1000த்துக்கும் அதிகமான வாக்குகளை இக்கட்சிகள் பெற்றுள்ளன.

    இடதுசாரிகள் வெளியேறினாலும் கவலை இல்லை

    தலா 2 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், தவெக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொண்டாலும், தவெக அரசுக்கு 119 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கும்.

    ஒருவேளை, பாமகவை அமைச்சரவையில் இணைத்துக்கொண்டால், விசிக வெளியேறக்கூடும் என்ற சூழல் ஏற்பட்டாலும், தவெக அரசுக்கு சிக்கல் இருக்காது. இன்னும் நடைபெற இருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெறும் பட்சத்தில், அக்கட்சி மற்ற கட்சிகளை சார்ந்து இருப்பதற்கான தேவை குறையும்.

    English Summary

    By winning both constituencies in the by-election, TVK's strength has risen to 109. The current situation is such that there is no risk even if the Left parties withdraw their support for the TVK-led coalition government.