அரசு வழக்கறிஞர் நியமிக்க ரூ.20 லட்சம் லஞ்சம்? தேனி மாவட்ட தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது புகார்!

  • சென்னை: அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது புகார் எழுந்துள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ரூ.20 லட்சம் பெற்றதாக எஸ்.பி அலுவலகத்தில் அவர் மீது வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    Advertisement

    ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அரசு வழக்கறிஞர் பதவிகளை பெற தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

    Advertisement

    பலரும், தவெக நிர்வாகிகளிடம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பெற முயல்வதாக கூறப்படுகிறது. ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    பலரும், தவெக நிர்வாகிகளிடம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பெற முயல்வதாக கூறப்படுகிறது. ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது புகார் எழுந்துள்ளது. அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு ரூ.20 லட்சம் பெற்றதாக எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வந்து உத்தமபாளையத்தைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற வழக்கறிஞர் தனது வழக்கறிஞர்கள் குழுவோடு வந்து புகார் மனு அளித்தார்.

    புகார் அளித்த வழக்கறிஞர் பேசுகையில், "தேனி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் லெப்ட் பாண்டி 20 லட்ச ரூபாய் வாங்கி இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த அரசு வழக்கறிஞர் அப்பாயிண்ட்மெண்ட்க்கு அவரு 20 லட்ச ரூபாய் வாங்குவதாகவும், அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததுக்கு தன்னிடம் ப்ரூப் உள்ளதாகவும் ஒரு வீடியோ யூடிபில் வந்திருக்கு. பல்வேறு மாவட்டங்களில் இந்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    இந்த முறைகேடு புகார்கள் வந்துகிட்டு இருக்கறதுனால, நாங்க எங்க இலவச சட்ட உதவி மையம் சார்பாக, புகார் அளித்துள்ளோம். அதாவது இந்த அரசு வழக்கறிஞர் நியமனம்ன்றது அக்யூஸ்டுக்காக வாதாடுற வக்கீல் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடுறவங்க. பாதிக்கப்பட்டவங்களுக்காக வாதாடுறவங்க. திறமையா தகுதியான முறையின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுக்கப்படணும்.

    அந்த அடிப்படையில இந்த மாதிரி முறைகேடா வந்தவங்க மூலமாக எப்படி நீதி கிடைக்கும்? அதனால இந்த அரசு வழக்கறிஞர் தேர்வு முறையை இன்டர்வியூ எடுத்து தூய்மையான வெளிப்படையான நிர்வாகமாக நடத்தணும். திருப்பி மறுபரிசீலனை செஞ்சு, இதுவரைக்கும் வந்த ரெகமெண்டேஷன்ஸ்ல யார் யாரு... அவங்க மேல வேற ஏதும் வழக்குகள் இருக்கா? அவங்க சரியா முறையா கேஸ் நடத்த தெரிஞ்சவங்களா? இது எல்லாத்தையும் பாத்து சரிபார்த்து நியமிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்திருக்கோம்.

    Advertisement

    அதுபோக எஸ்பி கிட்ட இந்த மாதிரி முறைகேடு புகார் குறிப்பா தேனி மாவட்டத்துல தேனி மாவட்ட செயலாளர் மீது இந்த மாதிரி ஒரு புகார் வந்திருக்க நிலையில, இதையும் விசாரித்து உண்மைத்தன்மை இருக்கும் பட்சத்துல உடனடி நடவடிக்கை எடுக்க சொல்லியும் கேட்டிருக்கோம்.

    சிஎம் சார் நீங்க தான சார் சொன்னீங்க.. அரசு பணத்த நான் தொடமாட்டேன் மக்கள் பணத்த தொடமாட்டேன்னு சொன்னீங்க.. உங்க மாவட்ட செயலாளர் தொட்டுக்கிட்டு இருக்காங்க சார். அதுக்கு என்ன சார் நடவடிக்கை எடுக்க போறீங்க? இன்னைக்கு நீங்க பாதிக்கப்பட்டதற்கு ஒரு குரலா நீங்க நிக்கலன்னா, இன்னைக்கு உங்க மாவட்ட செயலாளருக்கு நீங்க இவ்வளவு சுதந்திரம் கொடுத்தீங்கன்னா, நாளைக்கு இது எல்லாமே எங்க இருக்கும்? நீதிமன்றத்துல எதிரொலிக்கும். நேத்து ஒரு ஃபைன் போட்டிருக்காங்க மாவட்ட ஆட்சியருக்கு கோயம்புத்தூர்ல உங்களால அமைக்க முடியலன்னு. ஏன் அரசு வழக்கறிஞர நியமிக்க முடியாம திணறுதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    English Summary

    Allegations have surfaced against Left Pandi, the Theni South District Secretary of TVK, for accepting a bribe in connection with the appointment of a government pleader. Lawyers have submitted a complaint at the Police SP office, alleging that he accepted ₹20 lakh for the appointment.