'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு.. பட்ஜெட்டில் அறிவிப்பு

  • சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்தது. லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று தவெக கூறியுள்ளது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியை பிடித்த தவெக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்திற்கு ரூ. 560 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தவெக ஆட்சியமைத்து 3 மாதங்களாகிவிட்டது. அரை நூற்றாண்டு திராவிட அரசியல் ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தலில் தவெக அரசு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தனர். மகளிர் உரிமை தொகையை 2,500 ஆக உயர்த்துவோம், வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் வழங்குவோம், விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி, அண்ணன் சீர் வரிசை, அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம், வேலையில்லா பட்டதாரிகக்கு ரூ.4,000 உதவி தொகை உள்ளிட்ட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

    Advertisement

    தவெகவின் முதல் பட்ஜெட்

    தவெக ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்க பெண் பாதுகாப்பு படை ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளன. தாய்மாமன் தங்க மோதிர திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களை தவெக ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். தவெகவின் முதல் பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

    முதல்வர் விஜய் தலைமைச் செயலகம் வந்தடைந்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் வருகை புரிந்தனர். பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முன் நிதியமைச்சர் மரியவில்சன் முதல்வர் விஜயிடம் வாழ்த்து பெற்றார். 2027-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் மரியவில்சன்.

    Advertisement

    தமிழக பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன், மாபெரும் வெற்றி பெற்று ஜனநாயகனாக பேரவையில் முதல்வர் விஜய் அமர்ந்திருக்கிறார். வெளிப்படைத் தன்மையுடன் தவெக அரசு செயல்படுகிறது. ஊழலற்ற அரசை நடத்துகிறார் முதல்வர் விஜய். தவெகவின் வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழக மக்களின் வெற்றி என்று பேசினார்.

    தொடர்ந்து, எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ. 560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

    Advertisement

    அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கெளரவிக்கும் விதமாக தாய்மாமன் சீர் என்ற முறையில் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

    தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கப்படும். இத்திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

    English Summary

    CM Vijay ahead Tamilnadu government to Present their first Budget in assembly today. People expecting for good schemes.