ஒயிட் பவுடர் மந்திரி.. ரூ.500 தாள் இருந்தால் தான் மாத்திரை பொடியாகுமோ.. டிடிவி தினகரன் நக்கல்!

  • சென்னை: அமைச்சர் கில்லி சரத்குமார் போதைப்பொருள் போல் ஒரு பவுடரை செல்ஃபோன், ஏடிஎம் கார்டு மற்றும் 500 ரூபாய் தாள் மூலம் பயன்படுத்திய வீடியோ வெளியாகி விவாதமாகியது. இதனை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் இறங்கினர். அவருக்கு எதிராக திமுக வழக்கறிஞர் தரப்பில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமைச்சர் சரத்குமார் குழந்தைக்கு மாத்திரை நொறுக்கினேன் என்றார்.

    Advertisement

    ஆனால் அந்த வீடியோவில் குழந்தையும் இல்லை, மனைவியும் இல்லை. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மாத்திரைகளை மருத்துவர்கள் எழுதி கொடுக்க மாட்டார்கள் என்ற விவாதமும் நடந்து வருகிறது. இதனால் அமைச்சர் கில்லி சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், கில்லி சரத்குமாரின் வீடியோவை கண்டித்து முதலில் பதிவு போட்டதே நான்தான். அவரை கேட்டால் ஒயிட் பவுடர்.. மாத்திரையை நொறுக்கினேன் என்கிறார். விஜய்யே தோற்றுவிடுவார் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு திறமையாக இருக்கிறார்.

    சிஎஸ்கே ஆட்டத்தில் போய் இப்படி செய்திருக்கிறார். அந்த குழந்தைக்கு இப்போது கூட 3, 4 வயதுதான் இருக்கும். ஒரு மருத்துவரை வைத்து விளக்கம் கொடுக்க வைக்கிறார்கள்.. குழந்தைகளை வைத்து பதில் சொல்ல வைக்கிறார்கள்.. ரீல்ஸ் போட்டு ஏமாற்றலாம் என்றே நினைக்கிறார்கள். ஒயிட் பவுடர் மந்திரியை, அவரின் கையில் மாத்திரை மற்றும் ஏடிஎம் கார்டு கொடுத்து எப்படி பொடியாக்கினார் என்று கேட்க வேண்டும்.

    Advertisement

    500 ரூபாய் தாள் இருந்தால் தான் சரியாக பொடியாகுமா என்று தெரியவில்லை.. அவரிடம் பிராக்டிக்கலாக செய்ய சொல்ல வேண்டும். காவல்துறை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. போதைப்பொருள் தடுப்பு பிரிவு என்ன செய்கிறது என்று தெரியவில்லை.. காத்திருப்போம்.. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று..

    50 ஆண்டுகளாக ஸ்டாலின் அரசியலில் இருக்கிறார்.. நிர்மல் குமார் ஒரு சின்னப்பையன்.. அவர் ஸ்டாலினை பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்க சொல்கிறார்.. அற்ப்பவர்களுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிக்க தான் செய்வார்கள்.. அது கொஞ்ச நாள் ஓடத்தான் செய்யும்.. அதன்பின் அவர்களாகவே அடங்குவார்கள்.. அதுவரை பொறுமையாக காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    TVK: TTV Dhinakaran Takes a Sharp Jibe at TVK Minister Sarathkumar Mocks 'White Powder' Connection with Rs 500 Notes