லோக்சபா தேர்தலில் தவெக தனித்தே களமிறங்கும்.. விஜய் கணக்கு இதுதான்.. சொல்கிறார் சுவாமிநாதன்!

  • சென்னை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தவெக தனித்து களமிறங்கவே வாய்ப்புகள் அதிகம் என்று பத்திரிகையாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தவெக - காங்கிரஸ் கூட்டணியை பாஜக ரசிக்காது என்று கூறிய சுவாமிநாதன், இதுவரை காங்கிரஸ் உடனான லோக்சபா தேர்தல் கூட்டணியை விஜய் இறுதி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கடந்த சில வாரங்களாகவே பிரதமர் வேட்பாளர் ரேஸில் விஜய் இணைந்திருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. தேசிய அளவில் விஜய்க்கு முக்கியத்துவம் கிடைத்திருப்பதோடு, தென்னிந்திய மாநிலங்கள் அல்லாமல் வடகிழக்கு மாநிலங்களிலும் விஜய்க்கு ஆதரவு அலை அதிகரித்துள்ளது. இதனால் தவெக - காங்கிரஸ் இடையிலான உறவு நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Advertisement

    சென்னையில் அமித்ஷா வந்த பின் இந்த கோஷம் எழுந்துள்ளதும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் பேசுகையில், பாஜகவுக்கு பலன் தரக்கூடிய விஷயம் இது. தேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிரான மனநிலை மக்களிடையே உருவாகி இருக்கிறது. 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்திருந்தாலும், 240 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

    அதேபோல் அபிஜித் தீப்கே போன்றோரால் எதிர்ப்பலையை உருவாக்க முடிகிறது. பாஜக சரிவை நோக்கி செல்கிறது. தொடர்ந்து பின்வாங்கி கொண்டே இருக்கிறது. இதனால் போட்டி நேரடியாக மோடி vs ராகுல் காந்தி என்று இருந்தால், அது பாஜகவுக்கு பிரச்சனை. ஆனால் விஜய் போட்டியில் இருந்தால், அதனை பாஜக லாபமாக பார்க்கும். தவெக தனித்து போட்டியிட்டால், தென்னிந்தியாவில் காங்கிரஸ் பக்கம் செல்ல வேண்டிய வாக்குகள் பிரச்சனையாகும்.

    Advertisement

    கர்நாடகாவில் 28 தொகுதிகள் இருக்கிறது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வெல்ல வேண்டுமென்றால், விஜய்யின் தேவை அவசியம். தென்னிந்தியாவில் காங்கிரஸ் - விஜய் இணைந்து போட்டியிட்டால், 130 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடியும். அதுவே பிரதமர் ரேஸ் முற்றி விஜய் தனித்து போட்டியிட்டால், அது பாஜகவுக்கு லாபமாக அமையும்.

    காங்கிரஸ் - விஜய் சேர்ந்துவிட்டால், அமலாக்கத்துறை நிச்சயம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. விஜய் கையில் தான் அடுத்த ஆட்டம் இருக்கிறது. விஜய்யை பொறுத்தவரை மத்தியில் மைனாரிட்டி அரசு வரும் என்று கருதுகிறார். அப்போது விஜய் தனித்து நின்று தமிழ்நாட்டில் 40ல் வென்றால், அவர் கைகாட்டும் நபர் பதவி இருக்கும். இதனால் லோக்சபா தேர்தலில் தவெக தனித்தே களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம்.

    Advertisement

    லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளையும் தவெக தூக்கி சுமக்க வேண்டி இருக்கும். நாதக உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சியை இலங்கை விவகாரத்தை வைத்து விமர்சிப்பார்கள். இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டி இருக்கிறது. என்னவென்றால் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தல் கூட்டணியை உறுதி செய்துவிட்டது. ஆனால் விஜய்யோ, தவெகவோ இதுவரை இறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    English Summary

    TVK: TVK Likely to Contest Lok Sabha Polls Alone Without Congress Alliance, Says Journalist Swaminathan