விஜய் மட்டுமல்ல.. மொத்த அமைச்சரவையும் கூண்டோடு ஆபிஸை மாற்ற முடிவு? என்ன காரணம்?

  • சென்னை: தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் முதல்வர் விஜய்யின் அலுவலகம் உள்பட முக்கிய பகுதிகள் அனைத்தையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் இருக்கும் மாநாட்டு அரங்கிற்கு மாற்றப்பட இருக்கிறது .

    Advertisement

    வாஸ்து படி சில பல பாயிண்டுகளை விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் வலியுறுத்தியதால், தனது ஜாகையை உயர்ந்த இடத்துக்கு மாற்ற சம்மதித்தார் விஜய். அதன்படி, 10-வது மாடியில் மாற்றும் பணிகள் வேகம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

    Advertisement

    விஜய் ஏன் மாற்றுகிறார்?

    இதற்கு பின் வாஸ்து சாஸ்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. விஜய்யின் ஜோதிடர் அறிவுரையின் படி அவர் இந்த முடிவை எடுக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தலைமைச் செயலகத்தில் இரண்டாவது மாடியில் முதல்வர் விஜய்யின் அறை மற்றும் அவரது அலுவலகம், முதல்வரின் செயலாளர்கள் 4 பேரின் அறை மற்றும் அலுவலகம் இயங்கி வருகிறது. முதல்வர் விஜய், தனது அலுவலகத்தில் கிழக்கு திசைப் பார்த்து அமர்ந்திருக்கிறார்.

    இந்த அலுவலகமும் முதல்வர் அமர்ந்திருக்கும் திசையும் வாஸ்துபடி அமையவில்லை என்கிற ஒரு யோசனையை விஜய்யின் ஜோதிடர் தெரிவித் திருக்கிறார். அதனால், தனது அறையை மாற்றலாமா என்கிற யோசனை விஜய்க்கு இருந்து வந்துள்ளது. தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்திருக்கும் 10 அடுக்கு மாளிகையான நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது மாடியில் மாநாட்டு அரங்கம் இருக்கிறது. இங்கு தான் அனைத்துக் கட்சிகள் கூட்டம், கலெக்டர்கள் மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடக்கும். அந்தளவுக்கு பெரிய அளவிலான இடம்.

    Advertisement

    அண்மையில் கலெக்டர்கள் மாநாடு இந்த அரங்கத்தில் தான் நடந்தது. அப்போதே இதனை கவனித்துள்ளார் முதல்வர் விஜய். அந்த 10-வது மாடியிலிருந்து பார்த்தால், பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பிரமாண்டமான வங்காள விரிகுடா கடலின் அழகிய காட்சி கண்களுக்கு விருந்தாகும். மனதுக்கு ரம்மியமாக இருக்கும். அங்குதான் விஜய் மாறும் திட்டத்தில் இருக்கிறார்.

    அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கோட்டையில் இதுதான் பேச்சு

    இந்த செய்தியை நாம் பதிவு செய்ததுமே ஏகத்துக்கும் பரபரபானது. அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கோட்டையில் இதுதான் பேசு பொருளாக இருந்தது. இந்த நிலையில், முதல்வர் விஜய்யை தொடர்ந்து, முன் வரிசை அமைச்சர்கள் பலரும் தங்களின் ஜோதிடர்களிடம், தங்களின் அலுவலக அறை குறித்து வாஸ்து சாஸ்திரத்தை கேட்டுள்ளனர். அமைச்சர்களின் ராசி, நட்சத்திரம், நடந்துகொண்டிருக்கும் தசாபுத்தி உள்ளிட்ட அம்சங்களையும் அலுவலக அறை அமைந்துள்ள பொசிஷனையும் வைத்து கணித்து பல மாற்றங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

    Advertisement

    அமைச்சர்கள், தங்களின் அலுவலக அறையை மாற்றி வருகிறார்

    அதனைக்கேட்ட அமைச்சர்கள், முதல்வர் விஜய்யிடம் இது பற்றி தெரிவித்துள்ளனர். விஜய் இதற்கு ஓகே சொல்ல, தற்போது அமைச்சர்கள், தங்களின் அலுவலக அறையை மாற்றி அமைத்து வருகிறார்கள். இதற்காக செலவிடம்ப்படும் தொகை முழுவதும் அரசின் கஜானாவிலிருந்து எடுக்கப் படுகிறது.

    அரசு கஜானா

    அரசு கஜானா என்றாலே அது மக்களின் வரிப்பணம் தான். மக்கள் பணத்தில் இப்படி விரயச் செலவுகள் செய்வதாகவும், முதல்வர் விஜய் எவ் வழியோ அமைச்சர்களும் அவ்வழியே என்றும் அதிகாரிகள் தரப்பில் ஆதங்கப்படுகின்றனர்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    TVK Vijay and many ministers in the cabinet want to change their office room