சென்னை: ஐந்து தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், இடைத்தேர்தல் குறித்த பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் விஜய்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் (விராலிமலை தொகுதி), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர் தொகுதி) ஆகியோருடன் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), எஸ். ஜெயகுமார் (பெருந்துறை), பி. சத்யபாமா (தாராபுரம்) மற்றும் இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 6 பேரும் தங்களது பதவிக் காலத்திற்கு முன்பே விலகி, அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தனர். இது போக விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதியில் ஏற்கனவே அவர் ராஜினாமா செய்துவிட்டார்.
நெல்லையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரப் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் மிக முக்கியமான சட்ட அம்சங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார். ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேரின் கடந்த சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு எதிராக, ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கு எதிரான தேர்தல் முறைகேடு மற்றும் வெற்றிக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, இவர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள் என்பதற்காக அந்தத் தொகுதிகளுக்கு அவசரமாக இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் மிக வலுவான கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதியை அறிவிக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மொத்தமுள்ள இந்த 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தேர்தல் நடத்த நீதிமன்றம் தற்காலிக முட்டுக்கட்டை போட்டுள்ளது. ஆனால் இப்படிப்பட்ட நிலையிலும், திமுக தற்போதே தனது தேர்தல் களப்பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு இடையே இடைத்தேர்தல் குறித்த பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறாம் முதல்வர் விஜய். சமீபத்தில் முதல்வருக்கு அனுப்பிய உளவுத்துறை ரிப்போட்டில், 'சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழித்து விட்டோம் என விஜய் சொல்லிக் கொண்டிருக்கிறார். இடைத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் செலவாழிக்காமல் எப்படி அவர் தேர்தலை எதிர்கொள்கிறார்னு பார்ப்போம் என திமுக -அதிமுக கட்சியின் தலைவர்கள் விவாதித் துள்ளனர்' என்கிற தகவலை தெரிவித்துள்ளனர். இந்த ரிப்போர்ட்டில் சொல்லப்பட்ட தகவலின் அடிப்படையில் தான், பொறுப்பு அமைச்சர்களுக்கு விஜய் உத்தரவிட்டிருக்கிறார் என்று சொல்கின்றனர். 7 தொகுதிகளில் ஒன்றில் கூட மிஸ் ஆக கூடாது 7-0 என்ற கணக்கில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டு உள்ளாராம். இடைத்தேர்தல் நடத்த வேண்டிய தொகுதிகள் அடங்கிய மாவட்ட பொறுப்பு அமைச்சர்களோ, "இடைத்தேர்தல் நடக்குமா என்றே தெரியவில்லை. அப்படியிருக்கையில் இப்போதே தேர்தல் பணிகளில் கவனம் வையுங்கள் என்றால் எந்த பணிகளை கவனிப்பது? என ஆதங்கத்துடன் ஒருவருக்குள் ஒருவர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். - சிறப்பு நிருபர் எழில்இடைத்தேர்தலுக்கு எதிராக வழக்கு
மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு விஜய் உத்தரவு
விஜய் சொன்னது என்ன?