அரசு விழாவில் விராலிமலை தவெக வேட்பாளர் பெயரை அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்!

  • திருச்சி: விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பாக சி.விஜயபாஸ்கர் தான் களத்தில் நிற்கப் போவதாக அமைச்சர் செங்கோட்டையன் அரசு விழாவில் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்தடுத்து இடைத்தேர்தல்கள் எப்போது வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விராலிமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், தவெக வேட்பாளராக சி.விஜயபாஸ்கர் களமிறங்குவார் என பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் அண்மையில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 5 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், அடுத்தடுத்து இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் இன்று அரசு விழா நடைபெற்றது. விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இதனால் விராலிமலை தொகுதி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இன்று விராலிமலையில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "விஜயபாஸ்கர் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவருக்கு எல்லா வித்தையும் தெரியும். எங்களை எல்லாம் இங்கே அழைத்து வந்து களத்திலே நிற்கப்போகிறார், களத்தில் நிற்கப்போவது மட்டுமல்ல வெற்றியும் காணப்போகிறார், வெற்றி மட்டும் அல்ல நம் தளபதிக்கு பின்னால் நின்று பணியாற்றப் போகிறார்." எனக் கூறியுள்ளார்.

    Advertisement

    அரசு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் தவெக வேட்பாளர் பெயரை அறிவிக்கும் வகையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்களை குதிரை பேரத்தில் ஈடுபட்டு வாங்குவதாக தவெக மீது புகார் உள்ளது. தலைமைச் செயலகத்தில் இணைப்பு நிகழ்வு நடப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அரசு விழாவில் வேட்பாளரை அறிவித்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English Summary

    Minister Sengottaiyan’s remark at a government function—that C. Vijayabaskar would be the candidate representing the TVK in the Viralimalai constituency by-election—has caused a stir.