சென்னை: இன்னும் 100 ஆண்டுகளுக்கு தவெக தான் வெற்றி பெறும் என்று மதுரை ஆதினம் பேட்டியளித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் இரண்டிலும் தவெக தான் வெற்றி பெறும். அறநிலையத்துறை செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. அமைச்சர் ரமேஷ் சிறப்பாக செயல்படுகிறார். தவெக ஆட்சிக்கு ஆலோசனை செய்ய வேண்டியதே இல்லை. சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்று காஞ்சிபுரத்தில் மதுரை ஆதினம் பேட்டியளித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்கக்கூடாது என்றும், லஞ்சம் கேட்டால் என்னுடைய பெயரை சொல்லுங்கள் என்று விஜய் கூறியிருப்பதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. முதல்வர் விஜய் மாதிரி ஒரு முதல்வரை பார்த்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.
மதுரை ஆதினம் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சில கோயில்களை சீர்திருத்தம் செய்ய சொல்லி அமைச்சரிடம் சொல்லியிருக்கிறேன். அவரும் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். நல்ல அமைச்சர்.. நல்லா பழகுறாரு.. நம்ம சொல்கிறதை கேட்டுக்கொண்டு, சாமி உங்களுக்கு என்ன செய்யவேண்டுமோ சொல்லுங்க.. செய்கிறேன் என சொல்கிறார். செய்யுறேன்னு சொல்கிறார். அதுக்கப்புறம் என்ன?.. உன்ன கொண்டு சிறையில் வைப்பேன். கலவரம் பண்ட்ரேன் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை.. என்று கூறினார். அப்போது செய்தியாளர்கள் தவெக ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மதுரை ஆதினம், "நல்லா செய்கிறார்கள் அவ்வளவு தான் சொல்ல முடியும். தவெக ஆட்சி சிறப்பாக இருக்குது. இடைத்தேர்தலிலும் அவங்க தான்.. கன்பார்ம்.. எல்லா தொகுதிலயும் அவங்க தான்.. இனி 100 ஆண்டுகளுக்கு தவெக தான்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. மதுரை ஆதீனம் கோவிலுக்கு சென்றால் அவரை பின்தொடர்ந்து ஏராளமானோர் வரக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக கும்பாபிஷேகத்தில் நான் பங்கேற்கவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் ஆண்டவன் பெயரில் பதவி ஏற்றிருப்பது எனக்கு பிடித்து இருந்தது. லஞ்சம் கொடுக்கக்கூடாது என்றும், லஞ்சம் கேட்டால் என்னுடைய பெயரை சொல்லுங்கள் என்று விஜய் கூறியிருப்பதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. தவெக ஆட்சி அற்புதமான ஆட்சி. எனது ஆசி தவெகவுக்கே. இதுவரை இருந்த முதலமைச்சர்களைவிட விஜய் போன்ற அற்புதமான முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என்றார். மேலும், வரும் அக்.11 ஆம் தேதி தமிழ் சங்கம் சார்பில் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வெளியிட தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், அந்த புத்தகத்தை வெளியிட உள்ளதாகவும் மதுரை ஆதீனம் கூறினார்.இனி 100 ஆண்டுகளுக்கு தவெக தான்
விஜய் மாதிரி ஒரு முதல்வரை பார்த்ததில்லை