சென்னை: தவெக ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வரும் விஜய் மோகன் மீது, அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் முன்வைத்துள்ள பாலியல் அத்துமீறல் மற்றும் ஆபாச மிரட்டல் குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் குறித்து இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த கட்சியினரையும் உலுக்கியுள்ளன. என்ன நடந்தது?
ராணிப்பேட்டை மாவட்டம் கண்ணமங்கலம் கூட்ரோடு பகுதியை சேர்ந்த 34 வயது இளம்பெண், தவெகவில் பணியாற்றி வந்தார். தனக்கு மகளிர் அணியில் உயர்பதவி வேண்டும் என்று விஜய் மோகனிடம் அப்பெண் கேட்டதாகவும், அதற்கு உடனே விஜய் மோகனும் அந்த போஸ்டிங்கை வாங்கி தருவதாகவும் சொன்னாராம்.
இதுகுறித்து அந்த பெண் தன்னுடைய குற்றச்சாட்டில் சொல்லும்போது, "இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் என்னை நிர்வாணமாக நிற்க சொன்னார்.. நானும் பதவியின் பொருட்டு அதற்கு சம்மதித்தேன்.. ஆனால், அந்த வீடியோ கால் அழைப்பை ரகசியமாக ஸ்கிரீன் ரிக்கார்டிங் செய்துகொண்ட விஜய் மோகன், அதைப் பயன்படுத்தித் என்னை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். மாதவிடாய் நேரத்திலும் கூடத் எனக்கு மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையாகத் தொல்லை கொடுத்து, எல்லை மீறி நடந்துகொள்ள முயன்றார்" என்றெல்லாம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அப்பெண் அடுக்கியுள்ளார். இந்தத் தொடர் டார்ச்சர் தாங்க முடியாமல், கடந்த ஜூலை 22ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் அப்பெண் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதனடிப்படையில், ஜூலை 23ம் தேதியன்றே ஆற்காடு டவுன் போலீசார் விஜய் மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். ஆனால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நாட்கள் பல கடந்தும் விஜய் மோகன் மீது போலீசார் எந்தவிதமான விசாரணையோ அல்லது கைது நடவடிக்கையோ எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண், குற்றம் சாட்டப்பட்ட விஜய் மோகனின் போட்டோ மற்றும் அவர் தனக்கு அனுப்பிய மெசேஜ்கள், வாட்ஸ்அப் சேட் அடங்கிய அனைத்து ஆதாரங்களையும் தன்னுடைய கைகளில் ஏந்தியவாறு சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெளியே வீதியில் உட்கார்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், "விசாரணைக்கு என்னுடைய செல்போனை கேட்டபோதே முழு ஒத்துழைப்பையும் தந்து, ஒப்படைத்துவிட்டேன். சாதாரணமாக பேசும் எதிர்க்கட்சியினரை கூட உடனடியாக கைது செய்யும் காவல்துறை, இவ்வளவு பெரிய பாலியல் டார்ச்சர் செய்தவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனது கணவர் வேலைக்கு செல்லும்போதுகூட மிரட்டல் விடுக்கிறார்கள்.. விஜய் அண்ணாவை நம்பிதான் நாங்கள் ஓட்டுப்போட்டோம், ஆனால் அதற்கான நியாயம் எங்களுக்கு கிடைக்கவில்லை. விஜய் மோகன் தவெக என்பதால் அவரைத் தலைமை காப்பாற்றுகிறதா என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் சமரசம் கிடையாது என்று முதலமைச்சர் சொல்கிறார்.. ஆனால், விஜய் மோகன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எனக்கு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்றார் கண்ணீர் மல்க. இதனிடையே சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை மீட்டு உள்ளே அழைத்துச் சென்ற காவல்துறையினர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி அன்பு அவர்களிடம் நேரில் ஆஜர்படுத்தினார்கள்.. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து அனைத்து விவரங்களையும் மனுவாக பெற்றுக் கொண்ட கூடுதல் டி.ஜி.பி அன்பு, சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.. இதையடுத்து அந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது...!!ராணிப்பேட்டை தவெக விஜய் மோகன்
மாதவிடாய் நேரத்திலும்..
டிஜிபி அலுவலகம் முன்பே போராட்டம்
விஜய் அண்ணாவை நம்பி
விஜய் அண்ணாவை நம்பி