எம்எல்ஏக்களை தாண்டி.. கவுன்சிலர் வரை இறங்கிய தவெக! சென்னை மாநகராட்சியில் வெடிக்கும் சலசலப்பு!

  • சென்னை: சென்னை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில், திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைய சில கவுன்சிலர்கள் சில ரெடியாகி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    Advertisement

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். இப்படி இருக்கையில், தற்போது திமுகவை சேர்ந்த 10க்கும் அதிகமான கவுன்சிலர்கள் தவெகவில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை திமுகதான் வெயிட். மொத்தம் 151 கவுன்சிலர்கள் திமுகவுக்கு இருக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக அதிமுகவுக்கு 15 கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். எனவே மாநகராட்சி கூட்டத்தில் திமுக வைக்கும் தீர்மானம்தான் வெற்றி பெறும். ஆனால், என்னதான் பலமான கட்சியாக திமுக இருந்தாலும், தவெகவின் மக்கள் செல்வாக்கு திமுக கவுன்சிலர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    உள்ளாட்சி தேர்தல்

    விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது கவுன்சிலர்களாக இருப்பவர்களுக்கு மீண்டும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது டவுட்டுதான். இன்ஸ்டாகிராமில் கவனம் செலுத்துவது, ஜென் ஸி மீட் நடத்துவது, செய்தியாளர்கள் சந்திப்பில் இளைஞர்களை முன்னிறுத்துவது போன்றவற்றை பார்க்கும் போது.. இளைஞர்களை அதிக அளவில் களம் இறக்க திமுக திட்டமிட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படி இருக்கையில் மீண்டும் தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று சிலர் யோசிக்க தொடங்கியிருக்கின்றனர்.

    Advertisement

    அப்படியே மீண்டும் கவுன்சிலர் வேட்பாளர்களாக களம் இறங்கினாலும், தவெக அலையை சமாளித்து வெற்றிப்பெற முடியுமா? என்பதும் சந்தேகம் என்று திமுக கவுன்சிலர்கள் சிலர் யோசிக்கின்றனர்.

    வெடிக்கும் சர்ச்சை

    எனவே 10க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள், தவெகவுக்கு தாவ திட்டமிட்டு வருவதாகவும், அப்படி கட்சி தாவினால் உள்ளாட்சி தேர்தலில் மீண்டும் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று டிமாண்ட் வைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே விரைவில் இந்த கட்சி தாவல் நடக்கலாம் என்றும்.. இதனால், சென்னை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு வெடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

    ஆள் பிடிக்க இறங்கிய தவெக?

    அதிமுக எம்எல்ஏக்களை தவெக வளைத்து போட்டு வருகிறது என்று திமுக கடும் விமர்சனங்களை அடுக்கியிருந்து. தவெக இப்படி நடந்துக்கொள்வது சரியில்லை என்று அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்த இடதுசாரிகள் கூட எச்சரித்துள்ளனர். இருப்பினும், அதை கைவிடாமல் தற்போது கவுன்சிலர் வரை ஆள் பிடிக்க கட்சி இறங்கிவிட்டது என்று பல்வேறு தரப்பினரும் விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர்.

    English Summary

    TVK's Civic Offensive: The DMK holds a large number of councillor seats in the Chennai Corporation. Amidst this, reports have emerged that some councillors are preparing to leave the DMK and join the TVK.