2 பக்கமும் விஜய்க்கு இடி.. அதிமுகவுல இருந்து வந்தவங்களா? சொந்த கட்சிக்காரங்களா? தர்மசங்கடத்தில் தவெக

  • சென்னை: இப்பதான் தேர்தல் முடிந்து, ஒருவழியாக ஆட்சி அமைந்துள்ளது.. அதுக்குள்ளேயே இடைத்தேர்தல் பற்றின பரபரப்புகள் அரசியல் களத்தில் தொற்றிக் கொண்டுள்ளது.. அதுவும் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசு, இந்த தேர்தலில் என்ன செய்ய போகிறதோ? என்ற எதிர்பார்ப்பதான் நகர்ந்துகொண்டிருக்கிறது... காரணம், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட இப்போதே தவெகவுக்குள் முட்டல் மோதல்கள், நிர்வாகிகளுக்குள் ஆரம்பமாகி உள்ளதாம்.

    Advertisement

    தமிழகத்தில் விரைவில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரப்போகிறது.. இதனால் த.வெ.க.வுக்குள் சீட் கேட்டு அழுத்தங்கள் ஆரம்பமாகி உள்ளதால், இது தலைமைக்கு இப்போது மிகப்பெரிய தலைவலியை உண்டுபண்ணி வருவதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

    Advertisement

    இடைத்தேர்தலில் போட்டா போட்டி

    முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததுமே, அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவால் பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய தொகுதிகள் காலியானதுமே, சீட் யார் யாருக்கு என்ற ஆர்வம் எழுந்துள்ளது.

    இதில் முதலாவதாக மதுராந்தகம் தொகுதியை எடுத்துக்கொண்டால், அங்கு விவகாரம் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கிறது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக சார்பாக போட்டியிட்டு நூலிழையில் தோல்வியடைந்த எழில் கேத்தரின், தவெக கூட்டணியிலும் இந்தத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறாராம்.

    அதேநேரத்தில், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதமும் இந்த சீட்டின் மீது ஒரு கண் வைத்துள்ளதாக சொல்கிறார்கள்..

    Advertisement

    தவெக நிர்வாகிகள் - அதிமுக எம்எல்ஏக்கள்

    ஆனால் செங்கல்பட்டு மாவட்ட தவெக நிர்வாகிகளோ, இவர்கள் இருவருக்குமே சீட் தராமல், ஆரம்பத்திலிருந்தே கட்சிக்காக உழைத்த உள்ளூர் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் தந்து வருகிறார்களாம்.

    அடுத்ததாக, கொங்கு மண்டலத்தின் முக்கியமான தொகுதியான பெருந்துறையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக நெருக்கமாக இருந்து, பிறகு தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த அருணாசலத்திற்கு மீண்டும் வாய்ப்பு தரப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

    தென்மாவட்டம் அம்பாசமுத்திரம்

    இருந்தாலும் தவெக ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ ஜெயகுமார் ஆகியோரும் இந்த முறை ரேஸில் குதித்திருப்பதால் போட்டி விறுவிறுப்பாகி உள்ளது.. தாராபுரம் தொகுதியில் கவுரி சித்ரா மற்றும் பதவியை ராஜினாமா செய்த சத்யபாமா ஆகிய 2 பேருக்கும் இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது.

    Advertisement

    தென்மாவட்டமான அம்பாசமுத்திரத்தில் நிலவரம் இதைவிட சுவாரஸ்யமாக உள்ளது. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் வந்த இசக்கி சுப்பையாவுக்கு ஆதரவாக தொகுதி நிலவரம் சாதகமாக இல்லை என்பதால், அவருக்கு மீண்டும் சீட் கொடுக்க தலைமை கொஞ்சம் தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.

    இந்த சான்ஸை பயன்படுத்தி, கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜகோபாலும், கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேனும் சீட்டுக்காக டிமாண்டு செய்து வருகிறாராம்.

    விட மாட்டாரே விஜயபாஸ்கர்

    மேற்கண்ட தொகுதிகளைவிட, உச்சகட்ட டென்ஷன் விராலிமலை தொகுதியில்தான் நடந்து கொண்டிருக்கிறது.. அதிமுகவின் முக்கிய விஐபியாக இருந்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. அப்படி இணைந்துவிட்டால், அவருக்கு மீண்டும் விராலிமலையிலேயே சீட் கிடைக்க நிறைய சான்ஸ் உள்ளதாக சொல்கிறார்கள்.

    Advertisement

    ஆனால், விஜயபாஸ்கரின் வருகையானது, தனக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கணித்துள்ள தவெக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான முகமது பர்வேஸ், விஜயபாஸ்கரை கட்சியில் சேர்த்தாலும் அவருக்கு சீட் தரக்கூடாது என்று தலைமைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.

    இப்படி நாலாபக்கமிருந்தும் தவெகவுக்கு அழுத்தமோ அழுத்தம் தரப்பட்டு வருகிறதாம். இதனால் தலைமை தர்மசங்கடத்தில் கையை பிசைந்து நிற்பதாக கூறப்படுகிறது..

    2 பக்கமும் தவெக தலைமைக்கு இடி

    கட்சியை நம்பி பதவிகளைத் துறந்துவிட்டு அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு சீட் தராமல் போனால், கண்டிப்பாக அவர்கள் அப்செட் ஆவார்கள்..

    அதேசமயம் கட்சித் தொண்டர்களையும் உள்ளூர் நிர்வாகிகளையும் புறக்கணித்துவிட்டு, இப்போது வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அது அடிமட்டத் தொண்டர்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடும். இந்த 2 நெருக்கடியில்தான் தவெக தலைமை சிக்க கொண்டிருக்கிறதாம். இதை எப்படி கையாள போகிறது? யாரை எப்படி சமாதானப்படுத்த போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

    English Summary

    Two key issues confuse Vijay.. Will the by-election seats be allocated to TVK or to AIADMK MLAs?