உதயநிதிக்கு எதிராக திரும்பிய இரண்டு செக்ஷன்கள்.. ஜாமீனில் வர முடியாத பிரிவுகளின் விவரங்கள்

  • சென்னை: தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67 மின்னணு முறையில் ஆபாசமான கருத்துக்கள்/பதிவுகளைப் பரப்புதல்) என்பது ஜாமீனில் வர முடியாத பிரிவாக உள்ளது. முதல் முறை தவறு இழைத்தால், 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் வரை அபராதம் ஆகும். இது காவல் நிலையத்திலேயே பெயில் பெற முடியாது.. நீதிமன்றத்தை அணுகிதான் ஜாமீன் பெற இயலும்.. இந்த வழக்கு தான் உதயநிதி மீது போடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பிரிவுகளில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

    Advertisement

    கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து பேசியபோது சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Advertisement

    காவிரி நீர் கிடைக்காதது குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் நடிகை த்ரிஷாவின் பெயரை உரக்க முழங்கியுள்ளனர். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சிரித்துக்கொண்டே நீர் வருவது குறித்து இரட்டை அர்த்தத்தில், ஆபாசமான முறையில் கருத்து தெரிவித்ததாகவும், பின்னர் "நான் காவிரியைத்தான் குறிப்பிட்டேன்" என்று சமாளித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 9 பிரிவுகளின் விவரங்களை பார்ப்போம்.

    BNS 196 : மத/சாதி/இன மோதலைத் தூண்டி பொது அமைதியைக் கெடுத்தல்; ஜாமீனில் வர முடியாது)

    Advertisement

    BNS 196 : கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், வழக்கமாக ஜாமீன் கிடைக்கும் (சூழலைப் பொறுத்து மாறும்)

    BNS 79 : பெண்களின் சுயமரியாதைக்குக் களங்கம் விளைவித்தல்; ஜாமீனில் வரக்கூடியது

    BNS 352 : அமைதியைக் குலைக்கும் நோக்கில் அவமதித்தல்; ஜாமீனில் வரக்கூடியது

    BNS 296(b): பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல் (ஜாமீனில் வரக்கூடியது)

    BNS 351(2): குற்றவியல் மிரட்டல் ஜாமீனில் வரக்கூடியது

    BNS 61 : குற்ற சதி முதன்மைக் குற்றத்தைப் பொறுத்து ஜாமீன் கிடைக்கலாம்.. கிடைக்காமலும் போகலாம்

    TN Prohibition of Harassment of Woman Act (Sec 4)பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம்: ஜாமீனில் வர முடியாத பிரிவு

    Advertisement

    பொதுவாக இந்த வழக்கில் எப்ஐஆரில் இடம்பெற்றுள்ள ஒன்பது பிரிவுகளில் ஒரே ஒரு பிரிவு ஜாமீனில் வர முடியாத பிரிவாக இருந்தாலும், அந்த முழு வழக்கிலுமே காவல் நிலைய அளவில் ஜாமீன் வாங்கிவிட முடியாது. நீதிமன்றத்தை அணுகி தான் ஜாமீன் பெற முடியும். பொதுவவாக உயர்நீதிமன்றத்தையோ அல்லது முதன்மை அமர்வு நீதிமன்றத்தையோ அணுகி உடனடியாக முன்ஜாமீன் பெற முடியும்.ஆனால் முன்ஜாமீன் பெறுவதற்குள் கைது செய்யப்பட்டால், அதனை எதிர்த்தும் அவசர வழக்கு தொடர முடியும். திமுக இனி எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ள IT Act 67 மற்றும் BNS 196 போன்ற ஜாமீனில் வர முடியாத கடுமையான பிரிவுகள் இதில் பொருந்தாது என உயர் நீதிமன்றத்தில் அல்லது விசாரணை நீதிமன்றத்தில் வாதிட்டு ஜாமீன் பெற முயலும். நீதிமன்றத்தில் என்ன நடக்கிறதுஎனப்தை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    Advertisement

    English Summary

    Udhayanidhi Stalin Arrest News Updates in Tamil: Follow Udhayanidhi Stalin Arrest updates as protests intensify over his alleged remarks about actor Trisha during the Cauvery issue. Get the latest news, reactions, police action, and developments.