கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் மாஸ்டர் நிலன், மூன்று மாத குழந்தையாக இருந்தபோதிலிருந்து கடுமையான சுவாச பிரச்சனையை எதிர்கொண்டு வந்திருந்தார். தற்போது சிறுவனுக்கு 2 வயதாகியிருக்கும் நிலையில், உயிர் பிழைக்க அவர் போராடி வருகிறார். நம்மை போன்றவர்கள் நினைத்தால் சிறுவனை காப்பாற்ற முடியும்.
மாஸ்டர் நிலனுக்கு சிறுவயதிலிருந்து அதீத சளி, மூச்சுத்திணறல் தொந்தரவு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நிலன் இரும்பும் போது, பெற்றோர்களின் பயம் கூடிக்கொண்டே இருந்திருக்கிறது.
சாதாரண சளி, இருமல் தானே! என்று கவனக்குறைவாக பெற்றோர் இருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நிலனின் நிலைமை மோசமடைய தொடங்கியபோது.. அவர்கள் போகாத கோயில் இல்லை.. வேண்டாத தெய்வம் இல்லை. ஆனாலும் எதுவும் பலன் கொடுக்கவில்லை. எனவே கடைசி முயற்சியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், பிறவி இதய பிரச்சனை இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதையடுத்து அரசு மருத்துவமனைகளில் சிறுவனுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனர். இறுதியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைியல், MIOT மருத்துவமனை நடத்திய இலவச மருத்துவ பரிசோதனையில்.. கீழ்க்கண்ட பாதிப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெரிய வென்ட்ரிகுலர் செப்டல் குறைபாடு (பெரிய VSD ஷன்ட்) கிரேடு II மிட்ரல் ரிவர்ஜிடேஷனுடன் (MR) கூடிய டிஸ்பிளாஸ்டிக் மிட்ரல் வால்வு நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் எனில் உடனடியாக மிட்ரல் வால்வு சரி செய்யப்பட வேண்டும். அதேபோல வி.எஸ்.டி. அடைப்பை முன்கூட்டியே சரிசெய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை எனில், நிலன் தன்னுடைய மூச்சை நிரந்தரமாக நிறுத்திக்கொள்வார். அறுவை சிகிச்சை, மருந்துகள், மருத்துவமனையின் இதர செலவுகளுக்கு ரூ.3.5 லட்சம் ஆகும். ஒரு நாளைக்கு ரூ.400 சம்பாதிக்கும் சாதாரண கூலி தொழிலாளியான நிலனின் தந்தையால் இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாது. எனவே, நம்மை போன்றோர் நினைத்தால் நிச்சயம் நிலனை காப்பாற்ற முடியும். தாமதிக்காமல் இன்றே முடிந்த உதவியை செய்து சிறுவனின் உயிரை காப்பாற்றுவோம்.