சென்னை: வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை ₹35 கொடுத்து வாங்கும் விவகாரத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, மேலும் ஒரு பேரிடியாக உடன்குடி அனல்மின் திட்டம் தொடர்பான ரகசிய அரசாணை விவகாரம் வெடித்துள்ளது.
தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO / TNPGCL) கடந்த செப்டம்பர் 23, 2026 வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் அக்டோபர் 12, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட ரகசிய உத்தரவு நகல் தற்போது வெளியாகி மின் ஊழியர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கட்டப்பட்டு வந்த உடன்குடி அனல்மின் திட்டத்தை, அப்படியே தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்க்க முடிவெடுக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கசிந்துள்ள வாரிய உத்தரவின்படி (B.P. No. 51), உடன்குடி திட்டத்தில் இரண்டு முக்கிய அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: இதற்கு முன்பு உடன்குடி நிலை-2 மற்றும் நிலை-3 திட்டங்கள் தலா 2x660 மெகாவாட் என மொத்தம் 4x660 மெகாவாட் திறனுடன் திட்டமிடப்பட்டிருந்தன. தற்போது அவை தலா 2x800 மெகாவாட் என மாற்றப்பட்டு, மொத்த திறன் 4x800 மெகாவாட் (3,200 மெகாவாட்) ஆக உயர்த்தப்பட்டுள்ளது (கூடுதலாக 560 மெகாவாட்). அரசு நிறுவனமான TNGECL மூலம் கட்டப்பட்டு வந்த இந்த பிரம்மாண்ட திட்டத்தை கைவிட்டு, இனி அரசு நேரடியாக கட்டாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாறாக, பொது-தனியார் கூட்டு (PPP) முறையில், கட்டண அடிப்படையிலான போட்டி ஏலம் (TBCB - Tariff-Based Competitive Bidding) மூலம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB) வழியாக ஒரு தனியார் கன்சல்டன்சி நிறுவனம் நியமிக்கப்பட உள்ளது. சாத்தியக்கூறு அறிக்கை (DFR/DPR), அரசு அனுமதிகள் மற்றும் டெண்டர் இறுதி செய்வது வரை அனைத்து பணிகளையும் இந்த தனியார் நிறுவனமே மேற்பார்வையிடும். சுருக்கமாகச் சொன்னால், பல ஆயிரம் கோடி மதிப்புள்ள தமிழகத்தின் அரசு சொத்தான மின் உற்பத்தி திட்டத்தை தனியாரே கட்டி, மின்சாரத்தை உற்பத்தி செய்து, அவர்களே நிர்ணயிக்கும் விலைக்கு தமிழ்நாடு அரசுக்கு விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவால் மிகப்பெரிய லாபம் அடையப் போவது அதானி பவர், டாடா பவர், ஜே.எஸ்.டபிள்யூ (JSW) போன்ற முன்னணி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். சுமார் 3,200 மெகாவாட் கொண்ட பிரம்மாண்ட மின் திட்டத்தை அமைத்து, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசுக்கு மின்சாரத்தை விற்று பல ஆயிரம் கோடி ரூபாய் லாபத்தை இந்த நிறுவனங்கள் அள்ளப் போகின்றன. அரசுத் தரப்பில் சொல்லப்படும் ஒரே சாதக அம்சம் என்னவென்றால், ஒரு 800 மெகாவாட் அலகை அமைக்க சுமார் ₹8,000 கோடி தேவைப்படும். நான்கு அலகுகளுக்குத் தேவையான சுமார் ₹32,000 கோடி முதலீட்டை உடனடியாக அரசு செய்ய வேண்டியதில்லை; உடனடி நிதிச் சேமிப்பு ஏற்படுகிறது என்பது மட்டுமே. ஆனால், இந்த தற்காலிக சேமிப்பு எதிர்காலத்தில் தமிழகத்திற்கு பேராபத்தாக முடியும் என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த தனியார்மய முடிவால் ஒட்டுமொத்த இழப்பையும் சந்திக்கப் போவது தமிழக மக்களும் மின்சார வாரியமும்தான்: அரசே இந்த மின் நிலையத்தை அமைத்து இயக்கினால், ஒரு யூனிட் மின்சார உற்பத்திச் செலவு சுமார் ₹4 மட்டுமே ஆகும். ஆனால், தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும்போது ஒரு யூனிட்டுக்கு ₹6 முதல் ₹6.50 வரை அரசு கொடுக்க வேண்டியிருக்கும். இந்த கூடுதல் சுமை இறுதியில் மக்களின் மின் கட்டணத்தில்தான் கை வைக்கும். ஏற்கனவே ₹2.47 லட்சம் கோடிக்கும் அதிகமான கடனில் தத்தளிக்கும் மின்சார வாரியத்தின் சுமை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியாருக்கு கொடுக்கும் கட்டணத்தால் பல மடங்கு அதிகரிக்கும். அரசு நடத்தும் திட்டமாக இருந்தால் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு நிரந்தர மின்வாரிய வேலைவாய்ப்புகளும், ஊழியர்களுக்கு பதவி உயர்வுகளும் கிடைத்திருக்கும். தனியார் வசம் செல்லும்போது இவை அனைத்தும் ஒப்பந்த கூலி முறைகளாக மாற்றப்பட்டு உரிமைகள் பறிக்கப்படும். மின் உற்பத்தி என்பது ஒரு மாநிலத்தின் அடிப்படை இறையாண்மை மற்றும் சொத்து. அதை தனியாரிடம் ஒப்படைத்தால், வருங்காலத்தில் மின்சாரத்திற்காக தனியார் முதலாளிகளின் தயவை மட்டுமே நம்பி வாழும் அடிமை நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்படும். ஒருபுறம் மின்வெட்டை செயற்கையாக உருவாக்கிவிட்டு ₹35-க்கு தனியார் ஆலைகளிடம் மின்சாரம் வாங்கும் டெண்டர் சர்ச்சை.. மறுபுறம் மாநிலத்தின் எதிர்கால அனல்மின் திட்டத்தையே தனியாருக்கு தாரைவார்க்கும் ரகசிய அரசாணை கசிவு.. இவை இரண்டும் தவெக அரசின் மீது பொதுமக்களுக்கு கடுமையான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. "மாற்றம் தருவோம், மக்கள் சொத்தைக் காப்போம்" என்று பேசிவிட்டு, அமைதியாக அரசு மின் திட்டங்களை பெருநிறுவனங்களுக்கு கைமாற்றி விடுவது மன்னிக்க முடியாத நிர்வாகத் தோல்வி என்று தொழிற்சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் கொந்தளிக்கின்றன. இந்த மக்கள் விரோத ரகசிய உத்தரவை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.ரகசிய உத்தரவில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?
தனியார் ஆலோசகர் நியமனம்
யாருக்கு லாபம்? 100% பெருநிறுவனங்களுக்கே கொண்டாட்டம்!
யாருக்கு நஷ்டம்? மக்கள் தலையில் விடியும் புதிய சுமை!
மின்சார வாரியத்தின் கடன் உயரும்:
மாற்றத்தை சொன்ன அரசு செய்யும் மிகப்பெரிய தவறு!