விஜய் படத்துல அப்படியொரு சீன் வைத்துவிட்டு! இரட்டை அர்த்தம் குறித்து பேசலாமா? உதயநிதி கேள்வி

  • சென்னை: பெண்களை தவறாக பேசக் கூடாது, இரட்டை அர்த்தத்தில் பேசக் கூடாதுனுலாம் பேச முதல்வர் விஜய்க்கு தகுதியே இல்லை. இவர் நடித்த படங்கள் என்ன, வைத்த காட்சிகள் என்ன, பாடின பாட்டுகள் என்ன என்பதை பேசினால் தாங்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை என்பதால் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    Advertisement

    இதையடுத்து சட்டசபை வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மிசாவை பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? அதாவது தகுதி இருக்கா, சர்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா, யாரோ எழுதி கொடுத்ததை 3 நாளாக மனப்பாடம் செய்துக் கொண்டு வந்து இங்க வாந்தி எடுத்திருக்கிறார்.

    இவரது படம் ரிலீஸுக்காக கொடநாட்டுல வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதல்வர். இவருக்கு மிசாவை பற்றியும் எங்கள் தலைவர்களை பற்றியும் பேச தகுதி இருக்கிறதா? முதல்வர் விஜய் மீது வருமான வரித் துறை வழக்கு இருக்கிறது. ரூ 15 கோடி சம்பளத்தை மறைத்ததாக அவர் மீது வழக்கு இருக்கிறது.

    Advertisement

    மிகவும் லேட்டாக வழக்கு போட்டிருக்கிறீர்கள் என ஓபனாக ஒப்புக் கொண்டவர்தான் இந்த டம்மி முதல்வர். கடந்த வியாழக்கிழமை காவல் துறை மானியக் கோரிக்கையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பேசினேன்.

    சட்டம் ஒழுங்கு குறித்து நேரடியாக கேள்விகள் கேட்டிருந்தேன். நேரடியாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என கேட்டிருந்தேன்.

    45 நிமிடங்கள் முதல்வர் பதிலுரை அளித்தார். அதில் 15ஆவது நிமிடத்திற்கு பிறகு எந்த ஆதாரமும் இல்லாமல் எங்கள் மீது குற்றம்சாட்டியிருந்தார். எங்க மேல பழியை போடாமல் மூன்று மாதங்களில் என்னென்ன செய்திருக்கீங்கன்னு சொல்லுங்கள் என்றுதானே கேட்டிருந்தேன்.

    Advertisement

    எங்களுக்கு பதில் சொல்றதுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. சபாநாயகர் முதல்ல ஒத்துக்கிட்டாரு. ஆனால் அவருக்கு ஏதோ ஒரு துண்டு சீட்டுவந்தது, அதன் பிறகு அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

    சர்காரியா கமிஷனில் முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த தவறையும் செய்யவில்லை என ரிப்போர்ட் வந்திருக்கிறது. அதன் பிறகு மக்களின் ஆதரவை பெற்று 3 முறை திமுக ஆட்சி அமைத்திருக்கிறது.

    பெண்களை பற்றி தவறாக பேசக் கூடாது, ரெட்டை அர்த்தத்தில் பேசக் கூடாதுனு சொல்கிறார். அதற்கும் இந்த முதல்வருக்கு தகுதியே கிடையாது. இவர் நடித்த படங்கள் என்ன, வைத்த காட்சிகள் என்னென்ன, பாடின பாட்டுகள் என்ன? இதெல்லாம் பேசினால் ரொம்ப தாங்க முடியாது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்திருந்தார்.

    Advertisement

    தஞ்சையில் நடந்த காவிரி நீர் பிரச்சனைக்கான போராட்டத்தின் போது திமுகவினர் ஒரு நடிகையின் பெயரை சொன்னதும் உதயநிதி, ஒரு விஷயத்தை சொல்ல, அது இரட்டை அர்த்த பேச்சாக மாறியது. இதனால் அவர் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தை மனதில் வைத்தே, விஜய், "பெண்கள் குறித்து டபுள் மீனிங், டிரிபிள் மீனிங் பேசக் கூடாது, மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும்" என எச்சரித்தார்.

    English Summary

    LOP Udhayanidhi Stalin criticises CM Vijay that there is no eligible to say about double meaning speech on women.