தஞ்சை கிழக்கு இல்லை.! வேறு காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி? வெளியான தகவல்

  • சென்னை: பிரபல நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சை அழைத்து செல்லப்படுகிறார். இதற்கிடையே அரியலூர் வழியாக உதயநிதியை அழைத்து வராமல் திருச்சி வழியாக அழைத்து வருவதாகவும் போலீசார் வேண்டும் அலைக்கழிப்பதாகவும் திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு உதயநிதியை போலீஸ் அழைத்து செல்லவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    தஞ்சையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி கலந்து கொண்டார். அப்போது அவர் முதல்வர் விஜய் மற்றும் பிரபல நடிகை குறித்து அவதூறாக பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் தஞ்சை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    Advertisement

    உதயநிதி

    இந்த விவகாரத்தில் உதயநிதியை கைது செய்ய இன்று காலையே அவரது இல்லத்திற்கு போலீசார் விரைந்தனர். இருப்பினும், உதயநிதியை கைது செய்ய திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாஜி அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் ஸ்டாலின் மருகன் சபரீசன் ஆகியோர் உதயநிதி இல்லத்திற்கு விரைந்தனர். இருப்பினும், போலீசார் உதயநிதியை கைது செய்தனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை போலீசார் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்கின்றனர். இதில் தான் இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அரியலூர் வழியாக சென்றிருந்தால் சுமார் ஒரு மணி நேரத்தில் தஞ்சாவூரை அடைய முடியும் என்ற நிலையில், போலீசார் வேண்டும் என்றே திருச்சி வழியாக அழைத்துச் செல்வதாகவும், இதனால் பயண நேரம் மேலும் ஒன்றரை மணி நேரம் அதிகரிக்கும் என திமுக குற்றம்சாட்டியுள்ளது.

    Advertisement

    அலைக்கழிப்பு

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை சென்னை - மதுராந்தகம் - விழுப்புரம் - பெரம்பலூர் - திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு போலீசார் அழைத்து செல்கின்றனர். தற்போது போலீஸ் வாகனம் பெரம்பலூரை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அரியலூர் வழியாக சென்றால் சீக்கிரமாகவே தஞ்சை செல்ல முடியும் நிலையில், வேண்டும் என்றே அலைக்கழிப்பதாக திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    குற்றச்சாட்டு

    இந்த வழக்கில் உதயநிதியை ரிமாண்ட் செய்யப் போவதில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும், விசாரணைக்குப் பிறகு அவரை இன்றே விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்படியிருக்கும்போது, கைது செய்யப்பட்டு சுமார் 7 மணி நேரமாகியும் உதயநிதி போலீஸ் காவலிலேயே இருக்கிறார். ரிமாண்ட் செய்யப்படாத ஒரு வழக்கில், அவரை சுமார் 7 மணி நேரம் போலீஸ் வாகனத்தில் அலைக்கழிப்பது ஏன் என்று திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    Advertisement

    இது குறித்து திமுகவினர் கூறுகையில், "அரியலூர் வழியாக நேரடியா தஞ்சாவூர் செல்ல முடியும். ஆனால், வேண்டுமென்றே திருச்சி வழியாக அழைத்து சென்று நேரத்தை வீணடிக்கின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

    தஞ்சை காவல் நிலையம்

    இதற்கிடையே, முதலில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் தற்போது தஞ்சை நகர தெற்கு காவல் நிலையத்தில் உதயநிதியிடம் விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கிடைத்தவுடனேயே தஞ்சையில் திமுக நிர்வாகிகள் கூடியுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க 5 மாவட்ட எஸ்பிக்களும் தஞ்சை விரைந்துள்ளனர்.

    Advertisement

    உதயநிதி தஞ்சாவூரை அடைந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்படுவாரா அல்லது வேறு ஏதேனும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து பரபரப்பு நிலவி வருகிறது.

    English Summary

    DMK has alleged that police deliberately took Udhayanidhi Stalin to Thanjavur via Trichy instead of the shorter Ariyalur route(உதநியி ஸ்டாலின் கைது குறித்து வெளியான தகவல்): Udhayanidhi Stalin arrest latest news in tamil.