உதயநிதி கைது சரியா? தவறா? மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா? களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

  • சென்னை: எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கைது குறித்து நமது ஒன்இந்தியா தமிழ் நேரடியாக களத்தில் இறங்கி மக்களிடம் கருத்து கேட்டோம். அதில் பெரும்பாலானோர் உதயநிதி பேசியது தவறாக இருந்தாலும் நேரடியாக இதுபோல கைது செய்வது அதிகார துஷ்பிரயோகம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.

    Advertisement

    தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார். இதற்காக இன்று காலை முதலே உதயநிதி வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    Advertisement

    இன்றே விடுவிப்பு

    பிறகு போலீசார் அவரை கைது செய்து தஞ்சை அழைத்து செல்கிறார்கள். சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக உதயநிதி போலீஸ் காவலில் இருக்கிறார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், உதயநிதியை காவலில் வைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் விசாரணை முடிந்தவுடன் அவரை விடுவிப்போம் என்றே தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    மக்கள் கருத்து

    உதயநிதி கைது குறித்து பொதுமக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. சிலர் கைது நடவடிக்கையை வரவேற்றாலும், பலர் கருத்து சுதந்திரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து நமது ஒன்இந்தியா நேரடியாக களத்தில் இறங்கி பொதுமக்களிடம் கருத்து கேட்டது. மக்கள் பலரும், "உதயநிதி பேசியது தவறாக இருக்கலாம். ஆனால் அதற்காக எடுத்தவுடன் கைது செய்வது எந்த விதத்தில் சரி?" என்ற கேள்வியே அதிகம் எதிரொலித்தது.

    Advertisement

    தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை, மேகதாது அணை விவகாரம், நீட் உள்ளிட்ட முக்கிய மக்கள் பிரச்சனைகள் இருக்கும் நிலையில், அவற்றை விட இந்த விவகாரத்திற்கே விஜய் அரசு முன்னுரிமை அளிப்பதாக விமர்சித்தனர். "பேச வேண்டிய முக்கிய பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் பேச்சுக்காக கைது செய்வது தேவையற்றது" என்று சிலர் கருத்து தெரிவித்தனர்.

    தவறான பேச்சு

    அதேநேரம் மற்றொரு தரப்பினர், முதலமைச்சர் பதவியில் இருப்பவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அல்லது அவதூறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றனர். இது தொடர்பாக சிலர், "அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், பொதுவெளியில் தனிநபர் விமர்சனம் இருக்க கூடாது. அந்த வகையில் அவர் பேசியது தவறு" என்றனர்.

    Advertisement

    என்ன நினைக்கிறார்கள்

    "அவர் பேசியது தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை விடுக்கலாம். உடனடியாக கைது செய்வது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல" என்ற கருத்தே பெரும்பாலான நபர்களிடம் இருந்து வந்தது. சிலர் இந்த கைது நடவடிக்கையை "அதிகார துஷ்பிரயோகம்" என்று விமர்சித்தனர். சொந்த கட்சியினர் இதுபோல பேசும்போது மவுனமாக இருந்துவிட்டு இப்போது மட்டும் நடவடிக்கை எடுப்பது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுவதாக இன்னும் சிலர் குறிப்பிட்டனர்.

    மொத்தத்தில், இந்த கைது விவகாரத்தில் உதயநிதியின் பேச்சு தவறு என்று கருதுபவர்கள்கூட, அதற்காக கைது செய்வது சரியான நடவடிக்கை அல்ல என்று கூறுகின்றனர். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்கள்!

    English Summary

    DMK leader Udhayanidhi Stalin arrest what people thinks(உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் குறித்து மக்கள் கருத்து): Majority felt the arrest itself amounted to an abuse of power in Udhayanidhi issue.