தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாசாரத்தை கொண்டு வந்துட்டாங்க! ஸ்லீப் மோடில் டம்மி சிஎம்.. உதயநிதி அட்டாக்

  • சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கையும், எம்.எல்.ஏக்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் இந்த டம்மி சிம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது என்றும், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத துப்பாக்கி கலாசாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு எஸ்.ஐ உள்பட 10 பேர் வரை கொலை செய்யப்பட்ட சம்வங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதற்கு தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தவெக அரசை கடுமையாக விமர்சித்தன.

    Advertisement

    சோப்ளாங்கி ஆட்சியாளர்கள்

    இது ஒரு புறம் இருக்க தவெக எம்.எல்.ஏவும், துணை சபாநாயகருமான, ரவிசங்கர் மனு அளிக்க வந்த சாமானியர் ஒருவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தவெகவுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் புகார் எழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    3 நாளா எங்கே இருந்தீங்க விஜய்? தலைமை செயலாளராலேயே CM-ஐ தொடர்பு கொள்ள முடியலையாமே? திமுக பரந்தாமன்
    Advertisement

    இந்நிலையில் வேலூர் குடியாத்தத்தில் சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ஞானவேல் (47) என்பவர் முன்விரோதம் காரணமாக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தவெக அரசை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- "சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM? தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள். குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    Advertisement

    IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்

    ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் 'பண்டிகை காலக் கொலைகள்' என்கிறது வெட்கங்கெட்ட அரசு. நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை 'எரியும் பொருள்' என்கிறது காவல்துறை. குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.

    தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர். மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.

    Advertisement
    “ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்”.. நிர்வாக நீதிபதிக்கே நீதி இல்லை! விஜய் அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி

    இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று கூறியுள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீரழித்த முதல்வர் விஜய் பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கேள்வி எழுப்பி இருந்தார்.

    English Summary

    Udhayanidhi Stalin, Leader of the Opposition has questioned when this "dummy" (ineffective) administration will take control of the law and order situation in Tamil Nadu and rein in the antics of the MLAs. Furthermore, Udhayanidhi Stalin expressed shock over the fatal shooting of an individual named Gnanavel near Gudiyatham, criticizing the "incompetent" rulers for introducing a "gun culture" to Tamil Nadu—something the state has never witnessed before.