தவெக ஆகஸ்ட் 5-ல் வைத்த பெரிய செக்! மரிய வில்சன் பேச்சுக்கு பிறகு உதயநிதி அவசர ஆலோசனை.. பின்னணி என்ன?

  • சென்னை: உதயநிதி ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபட போகிறார்.. காரணம், திமுக உட்பட அனைத்து கட்சிகளின் பார்வையும் ஆகஸ்ட் 5ம் தேதியை நோக்கித்தான் திரும்பியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்கொள்ளவும் தவெக அரசின் நகர்வுகளைச் சமாளிக்கவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏக்கள் அவசரக் கூட்டம் கூடுகிறது.

    Advertisement

    வரும் 5ம் தேதி, தமிழக சட்டப்பேரவையில் 2026-27ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இது என்பதால், மக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

    Advertisement

    பட்ஜெட் கூட்டத்தொடர்

    பட்ஜெட் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் முதல்வர் விஜய் தனித்தனியே தீவிர ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால், தற்போதைய மாநில கருவூலத்தில் போதிய நிதி இருப்பு இல்லாத சூழல் நிலவுவதாக தெரிகிறது.

    இதனால், நிதி ஒதுக்கீடு தேவைப்படும் கவர்ச்சிகரமான அல்லது நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவிப்புகளை தவிர்த்து, உண்மையான நிதி நிலைமை மற்றும் பற்றாக்குறை ஆகியவற்றை பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வலம் வருகின்றன.

    Advertisement

    நிதி நெருக்கடி - அரசியல் லாபம்

    நிதி நெருக்கடி தற்காலிகமானது என்பதால் குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக நிதியை வீணடிக்காமல், உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட முதன்மைத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்து அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு வளர்ச்சி, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் கடன் சுமையைக் குறைக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளுடன் இந்த முதல் நிதிநிலை அறிக்கை அமையவுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

    இதுகுறித்து சபாநாயகர் நேற்றைய தினம் ஜேசிடி பிரபாகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர், "ஓட்டளித்த வாக்காளர்களும், ஓட்டளிக்காதவர்களும் கூட வியந்து போற்றி பாராட்டக்கூடிய அளவில் இந்த பட்ஜெட் இருக்கும் என்று நம்புகிறேன். பட்ஜெட் கூட்டத்தொடரை முழு நேரலை செய்ய வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

    Advertisement

    திமுக ஊழல் - லிஸ்ட்

    இன்னொரு பக்கம், திமுக பற்றின பகீரை இன்று கிளப்பிவிட்டுள்ளார் நிதி அமைச்சர் மரிய வில்சன்.. முதலமைச்சர் விஜய் உறுதியளித்தபடி ஊழல் மற்றும் லஞ்சமற்ற வெளிப்படையான அரசை அமைப்பதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதாகவும், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரத்யேகத் தணிக்கை அறிக்கை மூலம் கடந்த திமுக அரசின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அமைச்சர் மரிய வில்சன் தயாரிக்கும் ஊழல் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு துணை நின்ற அதிகாரிகளின் பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்களாம்..

    Advertisement

    கடந்த 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், ரெய்டுகள் பாய்ந்தன. ஆனால் அதன்பிறகு கைது நடவடிக்கையோ, தண்டனையோ இறுதியாக நடக்கவில்லை. திமுக - அதிமுக இடையிலான திரைமறைவு நகர்வுகளால் நடவடிக்கை கைவிடப்பட்டிருக்கலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில், தவெக அரசு அந்த நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்றும், தவறு செய்தவர்கள் காலம் தாழ்த்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருவதாக செய்திகள் பரபரக்கின்றன..

    உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டம்

    இப்படிப்பட்ட பரபரப்புக்கு நடுவில்தான், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை அதாவது ஜூலை 28 மாலை 5.00 மணி அளவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது.

    Advertisement

    பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் அறிவிப்புகளை எதிர்கொள்வது மற்றும் தவெக அரசின் நகர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்க திமுக சட்டமன்றக் கொறடா எ.வ.வேலு இக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 5-ல் தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை...!!!

    English Summary

    Udhayanidhi Stalin Calls Emergency DMK MLAs Meeting After TVK's August 5 Budget Move