டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை விஜய்! ஞானேஷ் குமாருக்கு எதிராக போராடினால் கைதா? உதயநிதி கேள்வி

  • சென்னை: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் வெடித்திருக்கிறது. சென்னை பெசன்ட் நகரிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தமிழக போலீசார் அவர்களை கைது செய்திருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார் என்று விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்கள் மீது காவல் அராஜகத்தை ஏவி கைது செய்துள்ள இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    Advertisement

    ஒட்டுமொத்த நாடும் - இவர்கள் கூட்டணி வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் சில கட்சிகளும் கூட இந்தப் போராட்டத்தை ஆதரிக்கும் போது, இந்த Dummy முதலமைச்சர், யாருக்கு பயந்து நடுங்கி இந்தப் போராட்டத்தை நசுக்குகிறார்.

    சுயமரியாதையும் - நாட்டின் மீதும் அக்கறையும் கொண்ட அறிவார்ந்த இளைஞர்களை கைது செய்வதன் மூலம், டெல்லியின் அறிவிக்கப்படாத அடிமை என்பதை இந்த முதலமைச்சர் நிரூபித்துள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றத் துடிக்கும் இளைஞர் படையின் குரலை ஒடுக்குவதை ஏற்கமுடியாது" என்று கூறியிருக்கிறார்.

    English Summary

    Udhayanidhi Stalin: Protests broke out in Delhi against Chief Election Commissioner Gyanesh Kumar. The Tamil Nadu police have arrested youths who protested in Besant Nagar, Chennai. Opposition leader Udhayanidhi Stalin, who has opposed this, has criticized that the Chief Minister has proved that he is an undeclared slave of Delhi.