சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் போலீஸ் எஸ்எஸஐ உள்பட 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி நாளில் பட்டாசு சப்தத்தை விட பட்டாக் கத்திகளின் சப்தம் அதிகம் கேட்டது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் . பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை - அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் - தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் - ஆபிஸரை நியமித்தேன் என்றும் - தி.மு.க - தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் - ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு உதயநிதி விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நாளில் 9 கொலைகள் நடந்துள்ளன. இது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை அப்பட்டமாக காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கின்றன. எங்கெங்கு கொலை நடந்தன என்பதை பார்க்கலாம். தேனி சமதர்புரம் பகுதியில் சாலையில் பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்து கொண்டிருந்த கும்பலை எஸ்எஸ்ஐ செந்தில் குமார் தட்டி கேட்டதற்கு அவர் அந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடி விக்னேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அது போல் கல்லல் அருகே நவீன் என்ற ரவுடியும் படுகொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் சென்றான்பாளையம் அருகே ஆந்திராவை சேர்ந்த மேகலா என்ற இளம்பெண் பிரசாத் என்பவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக சிலம்பரசன் என்பவரை தாக்க வந்த கும்பல் வெட்டியதில் அவரது தம்பி தனுஷ் (18) என்பவர் உயிரிழந்தார். கடலூர் பெரியகட்டுப்பாளையம் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பிரித்திவிராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக ரவுடி அருளரசு, அவரது தம்பி அன்பரசன் ஆகியோரை போலீஸார் தேடி வருகிறார்கள். திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே கூலி வேலை செய்து வந்த இரு சிறுவர்கள் ராகுல், விஷால் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். திருச்சி புறத்தாக்குடி பகுதியில் கிறிஸ்டோபர் என்ற ஐடி ஊழியர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பாதுகாப்பு இல்லை
தீபாவளி நாளில் சோகம்.. கறி வாங்க சென்றபோது நேருக்கு நேர் மோதிய பைக்.. தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி!
ஆய்வு செய்தேன்
9 கொலைகள்
தேனியில் எஸ்எஸ்ஐ அடித்துக் கொலை
மானாமதுரையில் இரு கொலைகள்
திருவள்ளூரில் கொலை
வியாசர்பாடியில் ஒருவர் கொலை
பெங்களூரில் 7 பேர் படுகொலையில் ட்விஸ்ட்.. ஏற்காடு வந்து.. 30 அடி பள்ளத்தில் உடலை வீசிய கொடூரன்!
கடலூரில் ஒரு கொலை
திருச்சியில் 3 பேர் கொலை