பாஜக பாணியில் தவெக! Reels அரசு.. Sofa Model.. Dummy முதலமைச்சர் முன்வருவாரா? விட்டு விளாசிய உதயநிதி

  • சென்னை: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்கத்தினரை பல்வேறு மாவட்டங்களில் வீட்டுக்காவலில் தடுத்து வைத்து வருகின்றனர் போலீசார். இந்நிலையில், பாஜக பாணியில் பன்னோக்கு மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2013 மற்றும் 14ஆம் ஆண்டுகளில் தற்காலிக பணி நியமன அடிப்படையில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இணை இயக்குனர்கள் மூலம் இவர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

    Advertisement

    ஐந்தாண்டு காலம் பணி முடிந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பணி நியமன ஆணையில் சொல்லப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

    மருத்துவப் பணியாளர்கள்

    தற்போது வரை தினக்கூலி அடிப்படையிலேயே பணிபுரிந்து வரும் நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கையை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை எழும்பூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மருத்துவ பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

    வீட்டுக்காவல்

    இதை அடுத்து இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளுக்கே சென்ற தமிழ காவல்துறையினர் அவர்களை வீட்டு காவல் வைத்துள்ளனர். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் தடுத்து நிறுத்தி வீட்டு காவல் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் மருத்துவ பணியாளர்கள் தங்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின்

    இதற்கிடையே பாஜக பாணியில் பன்னோக்கு மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    Reels அரசு

    ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப் பணியாளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டத்திற்குப் புறப்படும் முன்பே வீட்டில் வைத்து கைது செய்யும் அளவுக்கு இந்த Reels அரசு அராஜகம் செய்வது ஏன்?

    Advertisement

    முதலமைச்சர்

    விவசாயிகள் - மாணவர்கள் - செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?மருத்துவப் பணிகளின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்கு பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த Dummy முதலமைச்சர் முன் வர வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

    English Summary

    Udhayanidhi Stalin condemns the alleged house arrests of multipurpose hospital workers protesting for permanent jobs, demanding their release and talks with the government.