சென்னை: கோடநாட்டில் பட ரிலீசுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவருக்கு மிசா பற்றி தெரிய வாய்ப்பில்லை என முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக ஆட்சி நடக்கிறது என்ற நினைப்பில் முதல்வர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார். 3 நாட்கள் அவகாசம் இருந்ததால், தயாரிப்புடன் முதல்வர் வருவார் என நினைத்தேன். ஆனால் சட்டம் ஒழுங்கு தொடர்பாக எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. சபாநாயகருக்கு என்ன அழுத்தம் வந்தது என தெரியவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டசபையில் சபாநாயகர் பேசுவதற்கு வாய்ப்பு மறுத்தாதாக கூறி திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
45 நிமிடங்கள் முதல்வர் பேசினார். முதல் 10 நிமிடங்கள் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் என்று பட்டியலிட்டு பேசினார். நாங்கள் அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தார். அதன்பிறகு ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள் மீது முன்வைத்தார். சபாநாயகருக்கு என்ன அழுத்தம் வந்தது என தெரியவில்லை. சட்டம் ஒழுங்கு தொடர்பாக எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை. 3 நாட்கள் அவகாசம் இருந்ததால், தயாரிப்புடன் முதல்வர் வருவார் என நினைத்தேன். பஞ்ச் டயலார்க், நடிப்பு என ரீல்ஸ்க்காக மட்டுமே முதல்வர் விஜய் பதிலுரை அமைந்துள்ளது. நான் கேட்ட கேள்வி எதற்கும் பதிலளிக்காமல் 1970-க்கும் போயிவிட்டார் முதல்வர் விஜய். சர்க்காரியா கமிஷன், மிசாவை பற்றி பேசுகிறார். மிசாவை பற்றி இவருக்கு எதாவது அருகதை இருக்கா? தகுதி இருக்கா? சர்க்காரியா கமிஷன் பற்றி தெரியுமா? யாரோ எழுதி கொடுத்ததை மூன்று நாட்களாக உக்காந்து மனப்பாடம் செய்துவிட்டு இங்கே வந்து வாந்தி எடுத்து இருக்கிறார். சர்க்காரியா கமிஷனில் எந்த தவறும் நடக்கவில்லை என்று அந்த கமிஷனே ரிப்போர்ட் கொடுத்துள்ளது. அதே போல மிசா பற்றி இவர் பேசுகிறார். கோடநாட்டில் போய் பட ரிலிசுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதல்வர். இவருக்கு மிசாவை பற்றி எங்கள் தலைவரை பற்றி பேச ஏதாவது தகுதி உள்ளதா? இவர் அரசியலுக்கு வந்ததுஆட்சியை பிடித்ததே ஒரு விபத்து. இவருக்கு மிசாவை பற்றி சர்க்காரியா கமிஷனை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. அதில் எந்த ஆதாரமும் இல்லை வெறும் குற்றச்சாட்டுகள். எங்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். முதல்வர் விஜய் மீது கூட வருமான வரி வழக்கு உள்ளது. 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததற்கு வழக்கு போட்டால் ரொம்ப லேட் ஆக வழக்கு போட்டதாக கூறி நீதிமன்றத்தில் ஓபனாக ஒப்புக்கொண்டவர்தான் இன்று இருக்கும் டம்மி முதல்வர். பொதுப்பணித்துறை அமைச்சர் மீதும் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. தவெவில் இணைந்துள்ள சி. விஜயபாஸ்கர், குப கிருஷ்ணன் மீதும் வழக்கு உள்ளது. இவங்களை எல்லாம் கூட சேர்த்து வைத்துக்கொண்டு எங்களை குறை சொல்ல என்ன தகுதி உள்ளது. ஆட்சி அமைக்க பொட்டி பொட்டியாக பணம் எடுத்துக்கொண்டு வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டதாக ஐயூஎம்எல் எம்.எல்.ஏ ஓபனாக சொல்லியிருக்கிறார். இப்படி ஓபனாக குதிரை பேரத்தில் இந்த அரசு நடந்து கொண்டு இருக்கிறது. எங்கள் மீதுள்ள வழக்குகளை சட்டப்படி சந்திக்க நாங்கள் அத்தனை பேரும் தயாராக உள்ளோம். என்று கூறினார்.ரீல்ஸ்க்காக மட்டும் பேசுகிறார்
கோடநாட்டில் வாட்ச்மேன் வேலை
ஓபனாக குதிரை பேரம்