அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைப்பு.. நேரில் சென்று சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!

  • சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிகளில் மிரட்டி வசூல் செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புழல் சிறைக்கு நேரில் சென்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷை சந்தித்துள்ளார்.

    Advertisement

    திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ஊழல் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரை சென்னை அமைந்தகரையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    Advertisement

    முதல் வகுப்பு சிறை

    சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு அன்பில் மகேஷ் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி சத்யமூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வரும் நவம்பர் 6 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.

    நீதிமன்ற உத்தரவையடுத்து புழல் சிறையில் நள்ளிரவில் அன்பில் மகேஷ் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் அவருக்கு முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அன்பில் மகேஷ் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறையில் அவருக்கு நோ ஆயில் நோ புரோட்டின் உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்று அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    Advertisement

    உதயநிதி சந்திப்பு

    இதையடுத்து, அன்பில் மகேஷ் உடல் நிலையை கருத்தில் கொண்டு சிறையில் உணவு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், புழல் சிறைக்கு நேரில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஸை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவருடன் முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

    English Summary

    Udhayanidhi Stalin visited Puzhal Prison and met former Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poyyamozhi following his arrest over alleged extortion in schools.