அப்போவே கணித்த உதயநிதி ஸ்டாலின்! விஜய் பேச்சு இப்படிதான் இருக்கும்.. திமுகவினர் கொந்தளிப்பு

  • சென்னை: சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று பேசியது பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை குறி வைத்து பேசியிருப்பதாக விஜய் மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

    Advertisement

    கடந்த வெள்ளிக்கிழமை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உயதநிதி ஸ்டாலின் பேசுகையில், "வெறும் ரீல்ஸ்க்காக மட்டுமல்லாமல், ரீல்ஸ் கன்டென்டுக்காக இல்லாமல், ரோல் கேமரா ஆக்ஷன் மோடுக்கு வராம, டேக் டைவர்ஷன் செய்யாம, சம்பந்தமே இல்லாம, லாஜிக்கே இல்லாம குட்டி கதைகள் சொல்லாம, மக்களுடைய கேள்விகளுக்கு.. எங்களுடைய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கேட்டிருந்தார்.

    Advertisement

    இதையடுத்து விஜய் இன்று பேசியிருந்தார். "இந்த அவையில் உறுப்பினர்கள் பலரும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தங்கள் கருத்தை முன்வைத்துள்ளனர். இந்த அரசை குறைகூறும் நோக்கில் கூறியவர்களின் கருத்தைகூட மக்களின் பாதுகாப்பு குறித்த அவர்களின் கவலையையும், அக்கறையையும் இந்த அரசு மிகுந்த பொறுப்புணர்வுடன் எடுத்துக்கொள்கிறது. உள்நோக்கத்துடன் கூறிய கருத்தாக இருந்தாலும் கூட.. அதிலும் உண்மை இருக்கிறதா என்பதை பரிசீலித்து ஏற்பதில் எந்த பாகுபாடும் காட்ட மாட்டோம்.

    திருவள்ளுவர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்டோர் காவல்துறை செயல்பாடுகள் குறித்து விரிவாக கூறியிருக்கின்றனர். அந்த வகையில் நவீன காவல்துறையினரின் செயல்பாடுகளில் மாற்றம் தேவை. வெறுமென குற்றவாளிகளை கைது செய்வது மட்டும் காவலர்களின் வேலை கிடையாது. குற்றம் நடக்கும் சூழலை தடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதுவரை எல்லாம் ஓகேதான். ஆனால், அதன் பின்னர் அவர் பேசியது எல்லாம் திமுக மீதான குற்றச்சாட்டாகவே அமைந்தது.

    Advertisement

    சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏ ஒருவர், எலும்பை உடைப்பேன் என்று பேசியிருந்ததை விஜய் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், தங்களுக்கு ஓட்டு போடாத மக்களுக்கு நல்ல சாவே வராது என்று திமுக மூத்த உறுப்பினர் கூறியதாகவும் கூறிய விஜய், இப்படி எல்லாம் ஏன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதுதான் அரசியலா? இப்படி பேசுவதற்கு எதற்கு அரசியலில் இருக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர் திமுக மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை அடுக்கியிருந்தார்.

    ஆனால், நேற்று அடையாறில் நடந்த கொலை குறித்தோ, வட மாநிலத்தை சேரந்தவர் அடித்து கொல்லப்பட்டது குறித்தோ.. இதர சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தோ விஜய் எதையும் பேசவில்லை. எதிர்க்கட்சிகள் கேட்டது இந்த விஷயத்தைதான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மல்லாக்க படுத்துவிட்டது. இதை சரி செய்ய அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது? ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டன. இப்போதும் கூட சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தவில்லை எனில் என்ன அர்த்தம்? என்று கேள்வி எழுப்பியிருந்தன.

    Advertisement

    ஆனால், இதற்கான உரிய பதிலை முதலமைச்சர் கொடுக்கவில்லை என்று திமுகவினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அடுத்தடுத்த நாள் சட்டமன்ற தொடரில் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Udhayanidhi Stalin predicted Vijay: Chief Minister Vijay's speech in the Legislative Assembly today has garnered widespread attention. In particular, accusations have arisen that, instead of answering the opposition parties' questions, he directed his remarks at them.