அவை கூடியதுமே.. ஆட்டத்தை ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின்! சட்டசபையில் வெடித்த ’அமுதன்’ விவகாரம்! பரபர!

  • சென்னை: கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் விடுதி வளாகத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று சட்டசபையில் வெடித்துள்ளது. அவை கூடியதும் மானிய கோரிக்கையை விவாதம் தொடங்கும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்த நிலையில், அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக உதயநிதி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர் கொலை கோஷ்டி மோதல் அல்ல எனவும், இது மிகப்பெரிய பிரச்சினை என கூறியுள்ளார்.

    Advertisement

    கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் , கல்லூரிக்கு வெளியில் சக மாணவர்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் அமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Advertisement

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே போதை பொருள் குறித்து தகவல் அளித்ததால் மாணவன் படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுதிருக்கிறது.

    இது தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணை வேண்டும் என மாணவனின் பெற்றோரும் சக மாணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு திமுக சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் பாஜக. நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்திருக்கின்றனர்.

    Advertisement

    இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை நான்கு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது. இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிய போது திருக்குறளுடன் அவையை தொடங்கி வைத்தார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக அரசு 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் நிலையில் முதலமைச்சரின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், 100 நாட்களில் தமிழக வெற்றிக்கழக அரசு செய்த சாதனைகளை எடுத்துரைத்தார்.

    தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எவ வேலு பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என பேசினார். அப்போது குறிப்பிட்ட சபாநாயகர் ஏற்கனவே இரண்டு விவகாரங்கள் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுள்ளார் எனவும் அவருக்கு அனுமதி அளிக்கப்படும் என கூறினார்.

    Advertisement

    தொடர்ந்து பேசிய தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்," 100 நாள் சாதனை என பெருமை பேசும் தவெக அரசு நூறு நாட்களில் சட்டம் ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும். போதைக்கு எதிரான தொடர் ஒழிப்புணர்வு வன்முறைக்கு எதிரான கவுன்சிலிங் நடத்த வேண்டும். கோவையில் மாணவர் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கோஷ்டி மோதல் என அமைச்சர் கூறுகிறார்.

    உண்மையில் அது கோஷ்டி மோதல் அல்ல போதை பொருள் பயன்படுத்தபட்டது தொடர்பாக புகார் அளித்ததால் தான் மாணவர் கொலை செய்யப்பட்டதாக அவர்களது பெற்றோர்கள் நம்புகின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். அது மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து.இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மைதானத்தை வைத்து மாணவர் அமுதனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக சொல்லப்படும் நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

    English Summary

    Udhayanidhi Stalin demands a detailed probe into student Amuthan’s murder in Coimbatore, raising concerns over drugs and law and order.