ஃபர்னிச்சர் பிசினஸை சபைல வச்சுக்காதீங்க! விஜய் பதிலடிக்கு பிறகும், NEET விவகாரத்திலும் விடாத உதயநிதி

  • சென்னை: தமிழ்நாட்டில் நேற்றூ நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ததற்கு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என அவரது கூறியுள்ளார். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    Advertisement

    திமுகவும் தவெகவும் மோதிக்கொள்ளும் தற்போதைய சூழலில், "சோஃபா மாடல்" என்ற வார்த்தை தான் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. தவெக தலைவர் விஜய்யின் நிர்வாகத்தை விமர்சிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்தச் சொல்லை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறார்.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின் சோஃபா மாடல் ஆட்சி

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் தான் இந்த விவாதம் தொடங்கியது. அன்று பேசிய உதயநிதி ஸ்டாலின், "மாநிலத்தில் சோஃபா மாடல் ஆட்சி தான் நடக்கிறது. பிற கட்சிப் பிரதிநிதிகளைத் தொடர்ந்து விலைக்கு வாங்குவது தான் இந்த அரசின் பணியாக இருக்கிறது. இவர்களுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்களே வேதனைப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் தொலைவில் இல்லை. விரைவில் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமையும்" என்று பேசியிருந்தார்.

    Advertisement

    முதலமைச்சரின் பதிலடி

    இந்த பேச்சுக்கு சட்டப்பேரவையிலேயே பதில் அளித்தார் முதலமைச்சர் விஜய். "சோஃபா மாடல் என்றால் என்னவென்றே எனக்குப் புரிய ரொம்ப நாள் ஆனது. ஃபர்னிச்சர் சார்ந்த விஷயங்கள் தொழிலதிபர்களுக்குத் தான் தெரியும். இந்த பர்னிச்சர் வியாபாரத்தை சட்டமன்றத்திற்குள் எடுத்து வர வேண்டாம்" என்று கிண்டலாக கூறினார்.

    ஆனாலும் முதலமைச்சரின் பதிலுக்குப் பிறகும் உதயநிதி தன் விமர்சனத்தைக் கைவிடவில்லை. சமீபத்தில் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரிய எதிர்ப்பைக் கிளப்பியது.

    முதலமைச்சரைக் கடுமையாக விமர்சித்தார் என்ற காரணத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக கூறி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட உதயநிதி, "சட்டமன்ற உறுப்பினரையே கைது செய்யும் இந்த சோஃபா மாடல் அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    Advertisement

    அதேபோல, இப்போது டெல்லியில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மாணவர்களின் விவகாரத்திலும், மாநில அரசின் செயல்பாட்டைக் குறை கூற இதே வார்த்தையைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்..


    சென்னை போராட்டக்காரர்கள் கைது

    இது தொடர்பான சமூக வலைதள பதிவில், "சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    #CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

    Advertisement

    ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    உதயநிதியின் ஸ்மார்ட் அரசியல் மூவ்

    ஒரு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அதன் நிர்வாகத் திறனை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கவே உதயநிதி, சோபா மாடல் என்ற இந்தச் சொல்லைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி வருவதாக தவெகவினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள்..

    அதற்கேற்றபடி, முதலமைச்சர் விஜய் எத்தனையோ பதிலடிகளை கொடுத்தாலும், மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து உதயநிதி தொடுக்கும் இந்த "சோஃபா மாடல்" தாக்குதலும் குறையவில்லை.

    Advertisement

    கைது நடவடிக்கை, அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், களத்தில் நின்று ஆளுங்கட்சியைக் கேள்வி கேட்கும் உதயநிதியின் இந்த அரசியல் நகர்வு, திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வரவிருக்கும் தேர்தலிலும் இந்த வியூகம் திமுகவிற்கு சாதகமான சூழலையே உருவாக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..

    அதுமட்டுமல்ல, வெறும் விமர்சனமாக மட்டுமில்லாமல், மாணவர் போராட்டம் மற்றும் மக்கள் உரிமைகளுக்கான குரலாகவும் இது மாறுவதால், இந்த தாக்குதல் அரசியல் ரீதியாக திமுகவிற்குப் பெரும் பலத்தையே அளித்து வருகிறது என்றும் கூறுகிறார்கள்...!!!

    English Summary

    Udhayanidhi Stalin Revives "Furniture Business" Remark Against Vijay Over NEET Protest