உதயநிதி சொல்லிட்டாரு.. 59 திமுக எம்எல்ஏக்களுக்கும் கார் வேண்டாம்! ஒன் இந்தியா நேற்றே சொன்னது இதைதான்

  • சென்னை: தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில், 59 திமுக எம்எல்ஏக்கள் தங்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட வேண்டாம் என அதிரடியாக முடிவு செய்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் நிபந்தனைகளுக்குட்பட்டு வாகனங்கள் வழங்கப்பட வேண்டும்.. தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பொருளாதாரத் தரவுகளுக்கு ஏற்பவே எம்எல்ஏக்களுக்கு வாகனங்கள் ஒதுக்கப்பட வேண்டும்" என்றார்

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின் அதிரடி

    இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கார் வைத்துள்ள தவெக எம்.எல்.ஏ.க்கள் கார் கேட்க போவதில்லை. அமைச்சருக்கு கார், வீடு, 4 உதவியாளர்கள் கொடுக்கப்படுகின்றன.. ஆனால் எம்எல்ஏக்களுக்கு அப்படி கிடையாது.. ஒரு எம்எல்ஏ 3 லட்சம் மக்களை சென்று பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது.. அதனால்தான் கார் வழங்குகிறோம் என்றார்.

    உடனே உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்; அதனால் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கார் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம்.. அரசின் நிதிநிலைமையைக் கருத்தில்கொண்டு அரசு சார்பில் கார் பெறுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

    Advertisement

    எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அமைச்சரின் இன்றைய இந்த விவாதமானது சட்டமன்றக் கூட்டத்தொடரில் முக்கிய விவகாரமாக மாறியுள்ளதோடு, பொதுமக்களிடையேயும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒன் இந்தியா தமிழ் நேற்றே வெளியிட்ட செய்தி

    ஆனால் உதயநிதி ஸ்டாலின் இந்த முடிவை இன்று சட்டமன்றத்தில் அறிவிக்க போகிறார் என்று, நேற்றே ஒன் இந்தியா தமிழில், நாம் பிரத்யேகமாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

    அதாவது திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஏற்கனவே தங்களுக்கு சொந்தமாக கார்களை வைத்துள்ளனர். எனவே, அரசு தரப்பில் வழங்கப்படவுள்ள புதிய கார்கள் மற்றும் சலுகைகளை பெறுவதை தவிர்க்க வேண்டும் என்று ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்திருந்தாராம்.

    Advertisement

    இந்த சலுகைகளை ஒருவேளை ஏற்றுக்கொண்டால், அது பொதுமக்களிடையே தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி, பொதுவெளியில் மீண்டும் விவாதப் பொருளாக மாறிவிடும் என்பதால், இப்படியொரு முடிவை உதயநிதி எடுத்ததாகவும், இந்த வாகனங்கள் தங்களுக்குத் தேவையில்லை என சபாநாயகருக்குக் கடிதம் வழங்குமாறு தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு உதயநிதி அறிவுறுத்தியதாகவும் நேற்று நாம் எக்ஸ்க்ளூசிவ் தகவலாக வெளியிட்டிருந்தோம்.

    அதுமட்டுமல்ல, தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த கார் சலுகையைப் பெறக் கூடாது என்பதில் உதயநிதி உறுதியாக இருந்து, இதனை திமுக தலைவர் ஸ்டாலினிடமும் வலியுறுத்தி விட்டாராம்.. உதயநிதி மட்டுமல்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதே போன்றதொரு முடிவை எடுக்க போவதாகவும் ஒன் இந்தியா தமிழ் நேற்றே வெளிப்படுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    திமுக முடிவின் தாக்கம் எப்படி இருக்கும்?

    இன்று திமுக தரப்பில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அரசியல் ரீதியாகவும் நிதி மேலாண்மை ரீதியாகவும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.. அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சூழலில், தங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைத் தாங்களே முன்வந்து தவிர்ப்பது பொதுமக்களிடையே எதிர்க்கட்சிக்கு சாதகமான ஒரு பாசிட்டிவ்வான தோற்றத்தை உருவாக்கும். அத்துடன் மக்கள் நலன் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படும்... மற்ற கட்சிகளையும் இதே போன்ற முடிவை நோக்கி சிந்திக்கவைக்கும் அழுத்தத்தை இது அரசியல் களத்தில் உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.