“தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்பதில் திமுக உறுதி”.. தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த உதயநிதி!

  • சென்னை: "தொகுதி மறுவரையில் எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதே மறுவரையறையில் திமுகவின் உறுதியான நிலைப்பாடு. DELIMITATION கொண்டுவந்தால் அது எவ்வளவு பெரிய பாதிப்பாக அமையும் என்பதை இந்தியாவுக்கே முதலில் சொன்னவர் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான்" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    Advertisement

    தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இந்தத் தனித் தீர்மானத்துக்கு திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பாஜக, பாமக, தேமுதிக, அதிமுக ஆகிய கட்சிகள் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    Advertisement

    முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "தொகுதி மறுவரையறையின் பாதிப்பை இந்தியாவிற்கே முதலில் கூறியவர் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். தமிழகம் பாதிக்க கூடாது என திமுக ஆட்சியிலேயே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார் ஸ்டாலின். நியாயமான தொகுதி மறுவரையறை என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் கூட்டம் நடத்தினோம். அப்போது தொகுதி மறுவரையறை நடவடிக்கையை அடுத்த 20 ஆண்டுகள் நடத்தக் கூடாது என்று தெரிவித்தோம்.

    ஏப்ரல் 16-ல் மசோதா எரிப்பு போராட்டம் நடைபெற்றது. மசோதா நகலை எரித்தார் அன்றைய முதல்வர் ஸ்டாலின். மசோதா தோற்கடிக்கப்பட காரணம் திமுகதான். திமுக காட்டிய எதிர்ப்புதான் நாடாளுமன்றத்தில் மசோதா தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம். தொகுதி மறுவரையில் எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதே மறுவரையறையில் திமுகவின் உறுதியான நிலைப்பாடு.

    Advertisement

    தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே தொகுதி மறுவரையறையை எதிர்த்து அரசு கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஆதரிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

    English Summary

    “DMK’s firm stance regarding the delimitation exercise is that Tamil Nadu must not be adversely affected under any circumstances. It was the then Chief Minister MK Stalin who first alerted the entire country to the magnitude of the impact such a delimitation process would have,” said Leader of the Opposition Udhayanidhi Stalin.