“கைதான பிரேம்குமாருக்கும், தவெகவிற்கும் என்ன தொடர்பு?” விசாரணை நடத்த உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

  • சென்னை: ரூ.5000 கோடி மோசடி செய்ததாக தொழிலதிபர் பிரேம்குமார் என்பவரை சென்னையில் வைத்து கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று கைது செய்த நிலையில், பிரேம்குமாருக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    ரூ.5,000 கோடி நிதி மோசடி வழக்கில் கைதான தொழிலதிபர் பிரேம்குமார் கேரளா அழைத்துச் செல்லப்பட்டார். கேரள போலீசால் நேற்று சென்னையில் கைது செய்யப்பட்ட இவர், நெஞ்சு எனக் கூறியதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், அவருக்கு உடல் நல பாதிப்பு எதுவும் இல்லை என டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    Advertisement

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.

    இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

    முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர். பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?

    Advertisement

    அப்படி எந்த "விவகாரமான" தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?

    MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?

    இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Following the arrest of businessman Premkumar in Chennai today by the Kerala Crime Branch police in connection with a Rs 5,000 crore fraud, Leader of the Opposition Udhayanidhi Stalin has urged investigative agencies to probe the connection between Premkumar and CM Vijay.