தொட்டா விட மாட்டேன்னு பொங்கிட்டு, வழக்கில் சிக்கியவரை சேர்க்க முயல்வது ஏன்? விஜய்க்கு உதயநிதி கேள்வி

  • சென்னை: ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் எம்.எல்.ஏக்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் வர இருக்கும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது எனவும் விமர்சித்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து தவெகவில் இணையும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஏற்கனவே இசக்கி சுப்பையா உள்பட 4 எம்.எல்.ஏக்கள் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசை குதிரை பேர அரசு என விமர்சனம் செய்தது. ஷோபா மாடல் அரசு என்றும் விமர்சனம் செய்தது.

    Advertisement

    தொடர்ந்து சி விஜயபாஸ்கரும் தனது எம்.எல்.ஏவை ராஜினாமா செய்தார். அவரும் விரைவில் தவெகவில் இணையலாம் என பேசப்படுகிறது. ஆனால் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதனால் தவெகவில் இணைவது தாமதம் ஆகி வருவதாகவும் பேசப்படுகிறது. இந்த சூழலில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எம் ஆர் விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

    விரைவில் தவெகவில் இணையலாம் எனவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து வருவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா. இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 7-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆளுங்கட்சியின் ஆள்பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

    ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம். "தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்" என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?

    Advertisement

    SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்." என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    Udhayanidhi Stalin: Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin said people will teach TVK a lesson in the upcoming Assembly by-elections. He also alleged that continuing to "purchase" MLAs is a major betrayal of the people's democratic mandate.